sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

35 சதவீத போனஸ் வழங்க வலியுறுத்தல்

/

35 சதவீத போனஸ் வழங்க வலியுறுத்தல்

35 சதவீத போனஸ் வழங்க வலியுறுத்தல்

35 சதவீத போனஸ் வழங்க வலியுறுத்தல்


ADDED : செப் 16, 2011 02:50 AM

Google News

ADDED : செப் 16, 2011 02:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:கோவை, ஈரோடு மாவட்ட மில் தொழிலாளர் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம், காட்டூர் ஏ.ஐ.டி.யு.சி., சங்க அலுவலகத்தில் நடந்தது.

தியாகராஜன் (எம்.எல்.எப்.,) தலைமை வகித்தார். நிறைவேற்றப்பட்ட தீர்மானம் விவரம்:கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மில்களில் பணிபுரியும் நிரந்தரம், பதிலி, தற்காலிகம், தினக்கூலி, கேம்ப் கூலி உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும், 2010-11ம் ஆண்டுக்கான போனஸ் ஆக, 'சி' மற்றும் 'டி' குரூப் மில்கள், தொழிலாளி ஈட்டிய மொத்த சம்பளத்தில் குறைந்தபட்சம் 15 சதவீதம், அதிகபட்சம் 35 சதவீதம் வழங்க வேண்டும்.'ஏ' மற்றும் 'பி' குரூப் மில் தொழிலாளர்களுக்கு தலா 35 சதவீதம் போனஸ் வழங்கப்பட வேண்டும். போனஸ் கணக்கீட்டுக்கு எந்தவித ஊதியம் மற்றும் சதவீத உச்சவரம்பின்றி கணக்கிட்டு கொடுக்க வேண்டும். 'இந்த கோரிக்கைகளை தொழிற்சங்கத்தினருடன் பேசி முடித்து, அக்.,5ம் தேதிக்குள் மில் நிர்வாகத்தினர், தொழிலாளர்களுக்கு போனஸ் பட்டுவாடா செய்ய வேண்டும்.






      Dinamalar
      Follow us