sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மினி மாரத்தான்: பொள்ளாச்சி வீரர் முதலிடம்

/

மினி மாரத்தான்: பொள்ளாச்சி வீரர் முதலிடம்

மினி மாரத்தான்: பொள்ளாச்சி வீரர் முதலிடம்

மினி மாரத்தான்: பொள்ளாச்சி வீரர் முதலிடம்


ADDED : செப் 20, 2011 01:03 AM

Google News

ADDED : செப் 20, 2011 01:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : மாவட்ட அளவிலான மினி மாரத்தான் போட்டியில் பெண்கள் பிரிவில், சத்ரபதி சிவாஜி தடகள அமைப்பு வீராங்கனைகள் முன்னிலை பெற்றனர்.

ஸ்ரீ நாராயணா மிஷன் மற்றும் மாவட்ட தடகள சங்கம் சார்பில், மினி மாரத்தான் போட்டி நேரு ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் மாவட்டம் முழுவதுமிருந்து மாணவர், மாணவியர், ஆண்கள், பெண்கள் என, நான்கு பிரிவுகளில் 2500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆண்களுக்கு 8 கி.மீ., பெண்கள், மாணவ, மாணவிருக்கு 5 கி.மீ., தூரம் என நிர்ணயித்து போட்டிகள் நடந்தன. கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., துரைசாமி துவக்கி வைத்தார். நேரு ஸ்டேடியத்தில் துவங்கிய ஓட்டம் எல்.ஐ.சி., சந்திப்பு, குப்புசாமி நாயுடு மருத்துவமனை, பாலசுந்தரம் ரோடு வழியாக வ.உ.சி., பூங்கா வந்து, மீண்டும் ஸ்டேடியத்தில் முடிந்தது. ஆண்கள் ஓட்டம் மட்டும் லட்சுமி மில் சந்திப்பை சுற்றி பாலசுந்தரம் ரோடு வழியாக ஸ்டேடியம் வந்தது. ஆண்கள் பிரிவில், பொள்ளாச்சியை சேர்ந்த ராஜேஷ் முதலிடத்தையும், அடுத்த இரண்டு இடங்களையும் சத்ரபதி சிவாஜி தடகள சங்க வீரர்கள் கண்ணன், தீனதயாளன் பெற்றனர். பெண்களில் முதல் மூன்று இடங்களையும் முறையே, சத்ரபதி தடகள சங்கத்தின் பத்மாவதி, தனலட்சுமி, தனப்பிரியா கைப்பற்றினர். மாணவர்கள் பிரிவில் பொள்ளாச்சியின் சுரேஷ் முதலிடத்தை அடைந்தார். சூர்யா, ஒண்டிப்புதூர் பள்ளியின் விபின்ராஜ் அடுத்த இரண்டு இடங்களை பிடித்தனர். மாணவியரில் அத்லடிக் பவுண்டேசன் அமைப்பின் சூர்யா, கிருஷ்ணம்மாள் பள்ளியின் திவ்யா, சத்ரபதி அமைப்பின் கீதா முதல் மூன்று இடங்களை பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களும், பங்கேற்றவர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.






      Dinamalar
      Follow us