/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நகைக்கு ஆசைப்பட்டு மூதாட்டி கொலை :2 பேர் கைது
/
நகைக்கு ஆசைப்பட்டு மூதாட்டி கொலை :2 பேர் கைது
ADDED : செப் 20, 2011 11:43 PM
வால்பாறை : வால்பாறை அருகே முக்கால் பவுன் நகைக்கு ஆசைப்பட்டு மூதாட்டியை கொலை செய்த இரண்டு தொழிலாளர்களை போலீசார் கைது செய்தனர்.
வால்பாறை அடுத்துள்ளது சின்கோனா ரயாண்டிவிஷன் ஏழாவது பிரிவு எஸ்டேட். இங்கு தொழிலாளியாக வேலை செய்தவர் அம்மினி(62). தனியாக வசித்துவரும் இவர் கடந்த சில தினங்களாக வீட்டில் இல்லாததால், இவரது உறவினர்கள் அக்கம்பக்கத்தில் தேடி அலைந்தனர். இந்நிலையில் கடந்த 16ம் தேதி காலை வீட்டிற்கு அருகில் உள்ள வனப்பகுதியில் சாக்குமூட்டையில் பிணம் இருப்பது கண்டறியப்பட்டு, போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து,போலீசார் விரைந்து சென்று பிணத்தினை கைப்பற்றினர். போலீசார் விசாரணையில், கடந்த 9ம் தேதியன்று இதே எஸ்டேட்டைச் சேர்ந்த பிரபு(23), திருமூர்த்தி (22) ஆகியோர் அம்மினியின் வீட்டிற்கு சென்று தனியாக இருந்த அவரின் கழுத்தை நெறித்து கொன்று, முக்கால் பவுனை திருடிச் சென்றது தெரியவந்தது. அதன் பின், இரவு கொலை செய்யப்பட்ட அம்மனியை சாக்குமூட்டையில் கட்டி அருகிலுள்ள வனப்பகுதியில் வீசிவிட்டு சென்றது தெரியவந்துள்ளது. வால்பாறை இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி(பொறுப்பு) தலைமையில், முடீஸ் எஸ்.ஐ., காந்திராஜ், வாட்டார்பால்ஸ் எஸ்.ஐ., ஆனந்தன் மற்றும் போலீசார் இருவரையும் கைது செய்தனர்.