sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 11, 2026 ,மாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தாழ்வாக செல்லும் மின் கம்பிகள்: அச்சத்தில் அன்னூர் விவசாயிகள்

/

தாழ்வாக செல்லும் மின் கம்பிகள்: அச்சத்தில் அன்னூர் விவசாயிகள்

தாழ்வாக செல்லும் மின் கம்பிகள்: அச்சத்தில் அன்னூர் விவசாயிகள்

தாழ்வாக செல்லும் மின் கம்பிகள்: அச்சத்தில் அன்னூர் விவசாயிகள்


ADDED : அக் 12, 2011 11:29 PM

Google News

ADDED : அக் 12, 2011 11:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னூர்:'வாழைத்தோட்டங்களில் தாழ்வாக செல்லும் மின்சார ஒயர்களால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது' என, விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

அன்னூர் வட்டாரத்தில் 6,000 ஏக்கர் பரப்பில் நேந்திரன், கதளி ரக வாழை பயிரிடப்படுகிறது. பொன்னே கவுண்டன்புதூரில், சில வாழைத் தோட்டங்களின் மேலே மின்சார கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. விவசாயிகள் கூறியதாவது:வாழைத்தோட்டங்களில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், காற்றினால் வாழை இலைகள் மீதுபடுகின்றன. இதனால், தோட்டத்து மின் இணைப்பு மற்றும் மின் கம்பங்களில் பியூஸ் போய்விடுகிறது. ஐந்து கிராமங்களுக்கு ஓர் ஊழியர் மட்டும் உள்ளதால், ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு பின்பே பியூஸ் போட முடிகிறது. மழைக்காலங்களில் கம்பிகள் வாழை இலையில் பட்டு நிலம் வரை மின்சாரம் பாய்ந்து, தோட்டங்களில் வேலை செய்வோர் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. இதை தவிர்க்க, தாழ்வான மின்சார கம்பிகளை உயர்த்தி அமைக்க வேண்டும். ஆனால், அதற்கு அதிக செலவு ஆகும் என்பதால், தாழ்வாக செல்லும், மின் கம்பிகளை பிவிசி குழாய்க்குள் செல்லும்படி செய்தால் இதற்கு தீர்வு காணலாம். விவசாயிகள் சொந்த செலவில், மின் கம்பிக்கு வெளியே பொருத்த தரமான குழாய்களை வாங்கி வைத்துள்ளனர்.

இக்குழாய்களை பொருத்தி தரும்படியும், அதற்கான செலவு தொகையை செலுத்தி விடுகிறோம் என்றும், பொன்னே கவுண்டன்புதூர் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் கூறினோம். 'சில தோட்டங்களுக்கு மட்டும் செய்து கொடுத்தால், மற்ற விவசாயிகளும் கேட்பார்கள்' என்று கூறி அதிகாரிகள் மறுக்கின்றனர். ஆனால், இப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் மின்கம்பிக்கு வெளியே குழாய் அமைத்து கொடுத்துள்ளனர். மின்வாரிய அதிகாரிகளின் தாமதத்தால், வாழை விவசாயிகளின் தோட்டங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us