sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அரிசி தவிட்டை பதனம் செய்வதில் முதலிடம்

/

அரிசி தவிட்டை பதனம் செய்வதில் முதலிடம்

அரிசி தவிட்டை பதனம் செய்வதில் முதலிடம்

அரிசி தவிட்டை பதனம் செய்வதில் முதலிடம்


ADDED : அக் 12, 2011 11:40 PM

Google News

ADDED : அக் 12, 2011 11:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:அரிசி தவிட்டை பதனம் செய்வதில்,'சால்வன்ட் எக்ஸ்ட்ராக்டர்ஸ்' சங்க விருதினை பெற்று, வைகை அக்ரோ பிராடக்ட்ஸ் நிறுவனம் தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலிடம் பிடித்துள்ளது.மாநில நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது வினியோகத் துறை அமைச்சர் தாமஸ் மும்பையில் நடந்த விழாவில் விருது வழங்க, நிறுவன தலைவர் நீதிமோகன் பெற்றுக்கொண் டார். இதன் இலங்கை கிளை வைகை லங்கா நிறுவனம், நேஷனல் சேம்பர் ஆப் எக்ஸ்போர்ட்டர்ஸ் சார்பில் நடந்த விழாவில், 2010ம் ஆண்டின் விவசாய பொருள் ஏற்றுமதிக்கான உயர்தர விருதான 'கோல்டு' விருது பெற்றுள்ளது.

மதுரையில் தலைமையிடமாக கொண்டு 30 ஆண்டு கால வைகை குரூப் ஆப் கம்பெனியின் முதன்மை நிறுவனமான வைகை அக்ரோ பிராடக்ட்ஸ், அரிசி தவிட்டு எண்ணெய், வேதிப்பொருட்கள், பருத்தி இழை ஆகியவற்றை உற்பத்தி செய்கிறது.மதுரை, திருநெல்வேலி, நாமக்கல் ஆகிய இடங்களில் எண்ணெய் பிரித்தெடுக்கும் யூனிட்களை கொண்ட இந்நிறுவனம், ஆண்டுக்கு மூன்று லட்சத்து 20 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி தவிட்டை பதனம் செய்யும் தன்மை கொண்டுள்ளது. கொள்முதல், உற்பத்தி திறன் போன்றவை மட்டுமில்லாது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிலும் கொண்ட விடாமுயற்சியே சாதனைக்கு வழி வகுத்தது.






      Dinamalar
      Follow us