/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை வடக்கு மாவட்ட பா.ஜ., நிர்வாகிகள் நியமனம்
/
கோவை வடக்கு மாவட்ட பா.ஜ., நிர்வாகிகள் நியமனம்
ADDED : மே 08, 2025 12:34 AM
அன்னுார்; கோவை வடக்கு மாவட்ட பா.ஜ., நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவிநாசி, சூலூர், மேட்டுப்பாளையம் ஆகிய மூன்று தொகுதிகளை உள்ளடக்கிய, கோவை வடக்கு மாவட்டத்திற்கு பா.ஜ., நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பா.ஜ., கோவை வடக்கு மாவட்ட துணைத் தலைவர்களாக, சக்திவேல், சண்முகம், ஜெய்ஹிந்த் முருகேசன், சிதம்பரம், பழ முருகேசன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட பொதுச்செயலாளர்களாக, விக்னேஷ், கோபால்சாமி ஆகியோரும், மாவட்ட செயலாளர்களாக ஸ்ரீஜா, சுவாமிநாதன், மயில்சாமி, கஸ்தூரி பிரியா ஆகியோரும், மாவட்ட பொருளாளராக சுந்தரனும் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஒப்புதலுடன், நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக பா.ஜ., கோவை வடக்கு மாவட்ட தலைவர் மாரிமுத்து அறிக்கையில் தெரிவித்துள்ளார்.