/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை வீரர்கள் தகுதி; தேசிய போட்டிக்கு தேர்வு
/
கோவை வீரர்கள் தகுதி; தேசிய போட்டிக்கு தேர்வு
ADDED : நவ 17, 2024 10:21 PM

கோவை ; மாநில அளவிலான அக்ரோபாட்டிக் ஜிம்னாஸ்டிக் போட்டி, ஈரோட்டில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் நடந்தது. மாநில அளவில் இருந்து, 120க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய, கோவை மையத்தில் இருந்து 12 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இதில், 13 தங்கம், ஏழு வெண்கலம், மூன்று வெள்ளி பதக்கங்கள் பெற்றனர். இதன் வாயிலாக, வரும் டிச., 24ம் தேதியில் இருந்து ஜன., 4ம் தேதி வரை, குஜராத்தில் நடக்கும் தேசிய அளவிலான போட்டியில், 8 பேர் பங்கேற்க உள்ளனர்.
இவர்களையும், பயிற்சியாளர் சையது இப்ராஹிம் ஆகியோரையும், எஸ்.டி.ஏ.டி., மண்டல முதுநிலை மேலாளர் அருணா, மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆனந்தன் ஆகியோர் பாராட்டினர்.