/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
டேபிள் டென்னிஸ் போட்டியில் கோவை வீராங்கனைகள் அசத்தல்
/
டேபிள் டென்னிஸ் போட்டியில் கோவை வீராங்கனைகள் அசத்தல்
டேபிள் டென்னிஸ் போட்டியில் கோவை வீராங்கனைகள் அசத்தல்
டேபிள் டென்னிஸ் போட்டியில் கோவை வீராங்கனைகள் அசத்தல்
ADDED : பிப் 10, 2025 10:55 PM

கோவை; தேனி மாவட்டத்தில் நடந்த டேபிள் டென்னிஸ் போட்டியில் கோவை வீராங்கனைகள் இருவர் வெள்ளி வென்று பெருமை சேர்த்துள்ளனர்.
தேனி மாவட்டம், கம்பத்தில் உள்ள தனியார் பள்ளியில் பள்ளி மாணவ, மாணவியருக்கான பாரதியார் தின விளையாட்டு போட்டிகள் நடந்தன. இதில், டேபிள் டென்னிஸ் போட்டியில் மாநில அளவில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த, 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
மாணவியருக்கான, 14 வயதுக்குட்பட்டோர் இரட்டையர் பிரிவில் கோவையில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் நெஹிதா, 9ம் வகுப்பு பயிலும் ஷ்ரவென்யா ஆகியோரது ஜோடி வெள்ளி பதக்கம் வென்றது. பதக்கங்கள் வென்றவர்களை ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் பாராட்டினர்.