/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குற்றப்பின்னணி உள்ள 900 பேரை கண்காணிக்கும் கோவை போலீஸ்
/
குற்றப்பின்னணி உள்ள 900 பேரை கண்காணிக்கும் கோவை போலீஸ்
குற்றப்பின்னணி உள்ள 900 பேரை கண்காணிக்கும் கோவை போலீஸ்
குற்றப்பின்னணி உள்ள 900 பேரை கண்காணிக்கும் கோவை போலீஸ்
ADDED : செப் 09, 2025 10:44 PM

கோவை; கோவையில், குற்றப்பின்னணி உள்ள, 900 பேரை, கண்காணிப்பு வளையத்துக்குள் போலீசார் கொண்டு வந்துள்ளனர்.
கோவையில் குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில், போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மாநகர எல்லைக்கு உட்பட்ட, 15 போலீஸ் ஸ்டேஷன்களிலும், 24 மணி நேர ரோந்துப்பணி, பீட் போலீசார் எண்ணிக்கை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பிரச்னைகள் அதிகம் நடக்கும் பகுதிகளில் கூடுதலாக கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பழைய ரவுடிகள், குற்றவாளிகள், குற்றப்பின்னணி கொண்ட, 900 பேர் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அவர்களை தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள், மாநகர போலீசார் கொண்டு வந்துள்ளனர்.
கோவை மாநகர போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், 'குற்றவாளிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, எந்தெந்த பகுதிகளில் உள்ளனர் என, அடையாளம் காணப்பட்டுள்ளது.
அவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள ஸ்டேஷன்களுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. தற்போது அவர்கள் செய்யும் பணி, குற்றச்சம்பவங்களில் அவர்களுடைய தொடர்பு, திருந்தி நல்வழியில் நடக்கின்றனரா என்கிற தகவல் திரட்டப்படுகிறது. வேறு ஏதாவது ஒரு குற்றச்சம்பவத்தில் தொடர்புடையவர்களா, பின்னணியில் செயல்படுகின்றனரா உள்ளிட்டவற்றையும் கண்காணிக்கின்றனர்' என்றார்.