/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உலக கோப்பை பாரா துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு கோவை வீராங்கனை தகுதி
/
உலக கோப்பை பாரா துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு கோவை வீராங்கனை தகுதி
உலக கோப்பை பாரா துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு கோவை வீராங்கனை தகுதி
உலக கோப்பை பாரா துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு கோவை வீராங்கனை தகுதி
ADDED : மார் 04, 2024 12:38 AM

கோவை:டில்லியில் நடக்கவுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான, உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு, கோவையை சேர்ந்த வீராங்கனை தேர்வாகியுள்ளார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான, துப்பாக்கி சுடுதல் உலக கோப்பை போட்டி, டில்லியில் வரும் 8ம் தேதி துவங்குகிறது. இப்போட்டியின், 10மீ., 'பீப் சைட் ரைபிள்' போட்டியில், எஸ்.எச்.,1 பிரிவில் பங்கேற்க, கோவை கோவில்பாளையத்தை சேர்ந்த பாலாமணி என்ற வீராங்கனை தேர்வாகியுள்ளார்.
பாலாமணி, சென்னையில் நடந்த மண்டல அளவிலான போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று, தேசிய அளவிலான போட்டியில், உலக கோப்பை தகுதிக்கான புள்ளிகளை பெற்று தேர்வாகியுள்ளார். பாலாமணிக்கு நேரு ஸ்டேடியம் அருகில் உள்ள, பாரா ஒலிம்பிக் சங்க அலுவலகத்தில் பாராட்டு விழா நடந்தது.
இதில் நேரு கல்வி குழும செயலாளர் கிருஷ்ணகுமார், ஸ்வர்கா பவுண்டேஷன் தலைவர் சொர்ணலதா ஆகியோர் பாலாமணியை கவுரவித்தனர்.
பாலாமணி பேசுகையில், ''நான் போலியோவால் பாதிக்கப்பட்டு கல்வி கற்க, பல சிரமங்களை அனுபவித்தேன். போராடி பட்டம் பெற்று, ஆசிரியராக பணியாற்றி வந்த நிலையில், குடும்பச் சூழல் காரணமாக பணியை தொடர முடியாமல் போனது.
இதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தை போக்க, விளையாட்டில் ஈடுபட வேண்டும் என்ற நோக்கில் ஸ்வர்கா பவுண்டேஷனை அணுகிய போது, அவர்கள் நேரு கல்லுாரியில் உள்ள துப்பாக்கி சுடுதல் பயிற்சி மையத்தில் சேர்த்து விட்டனர்.
அங்கிருந்து சிறப்பாக பயிற்சி பெற்று, பல்வேறு போட்டிகளில் பங்கேற்று தற்போது உலக கோப்பைக்கு செல்ல உள்ளேன். பதக்கம் வெல்ல, ஆர்வமாக இருக்கிறேன்,'' என்றார்.
பாராட்டு விழாவில், கோவை மாவட்ட பாரா ஒலிம்பிக் சங்க தலைவர் சர்மிளா, துப்பாக்கி சுடுதல் பயிற்சியாளர் அஜய் ஆதித்தன் ஆகியோர் உடனிருந்தனர்.

