/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஏ.டி.எம்.,கள் கோவைக்கு 9வது இடம்
/
ஏ.டி.எம்.,கள் கோவைக்கு 9வது இடம்
ADDED : செப் 30, 2025 10:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நா ட்டிலேயே அதிக ஏ.டி.எம்.,களைக் கொண்ட மாநிலமாக தமிழகம் முதலிடத்தில் உள்ளது. மாவட்ட அளவில், இந்தியாவில் கோவை மாவட்டம் 9வது இடத்தில் உள்ளது.
ஒரு லட்சம் பேருக்கு எத்தனை என்ற அடிப்படையில் ஏ.டி.எம்., அடர்த்தி கணக்கிடப்படுகிறது. ஏ.டி.எம்., அடர்த்தியில் 2022, டிச., கணக்கீட்டின்படி தேசிய சராசரி 19 ஏ.டி.எம்.கள் ஆகும். ஆனால், தமிழகம் 39 ஏ.டி.எம்.,களுடன் முதலிடத்தில் உள்ளது.
கோவை மாவட்டம் முழுவதும் மொத்தம் 2 ஆயிரத்து 360 ஏ.டி.எம்.,கள் உள்ளன.
ஒட்டுமொத்தமாக தேசிய அளவில், பெங்களூரு, மும்பை, சென்னை, புனே, ஹைதராபாத், தானோ, ஆமதாபாத், கொல்கட்டாவைத் தொடர்ந்து, கோவை மாவட்டம் 9வது இடத்தில் உள்ளது.