தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வேலை நிறுத்த போராட்டத்துக்கு கோவை மண்டல ஆயத்த மாநாடு

வேலை நிறுத்த போராட்டத்துக்கு கோவை மண்டல ஆயத்த மாநாடு

வேலை நிறுத்த போராட்டத்துக்கு கோவை மண்டல ஆயத்த மாநாடு


ADDED : ஏப் 09, 2025 10:49 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 09, 2025 10:49 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை; மத்திய அரசை கண்டித்து, மே 20ம் தேதி நடக்கும் அகில இந்திய பொது வேலை நிறுத்த போராட்டத்துக்கான, கோவை மண்டல ஆயத்த மாநாடு, சிங்காநல்லுார் கரும்புக்கடை மைதானத்தில் நேற்று நடந்தது. மேயர் ரங்கநாயகி மாநாட்டை துவக்கிவைத்தார்.

தொ.மு.ச., பேரவை செயலாளர் பெரியசாமி தலைமை வகித்து பேசுகையில்,''மத்திய அரசை கடுமையாக எதிர்த்தால்தான், தொழிலாளர்களை காக்க முடியும் என்ற நிலை உள்ளது,'' என்றார்.

ஏ.ஐ.சி.சி.டி.யு., மாநில துணைத்தலைவர் பாலசுப்ரமணியன், எச்.எம்.எஸ்., மாநில செயலாளர் ராஜாமணி, எல்.எல்.எப்., மாநில பேரவை அமைப்பாளர் பேரறிவாளன், கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த, 9 தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட, 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us