/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோயம்புத்துார் சகோதயா பள்ளிகளுக்கு இடையே கிரிக்கெட்; 23 அணிகள் 'களம்'
/
கோயம்புத்துார் சகோதயா பள்ளிகளுக்கு இடையே கிரிக்கெட்; 23 அணிகள் 'களம்'
கோயம்புத்துார் சகோதயா பள்ளிகளுக்கு இடையே கிரிக்கெட்; 23 அணிகள் 'களம்'
கோயம்புத்துார் சகோதயா பள்ளிகளுக்கு இடையே கிரிக்கெட்; 23 அணிகள் 'களம்'
ADDED : ஜூலை 16, 2025 10:42 PM
கோவை; கோயம்புத்துார் சகோதயா பள்ளிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி திருமலையாம்பாளையம் நேரு கலை அறிவியல் கல்லுாரி மைதானத்தில் கடந்த, 12 முதல் நடந்துவருகிறது. 16 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பிரிவில், 23 பள்ளிகளின் அணிகள் அசத்தி வருகின்றன.
இதில், சி.எஸ்.அகாடமி அணியும், சுகுணா பிப் பள்ளி அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த சுகுணா அணி, 15 ஓவரில் நான்கு விக்கெட்களை இழந்து, 99 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய, சி.எஸ்.அகாடமி அணி, 14.4 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்புக்கு, 101 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
தி இந்தியன் பப்ளிக் பள்ளியும், ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி அணியும் மோதின. பேட்டிங் செய்த, ஜெயேந்திர பள்ளி அணியினர், 15 ஓவரில் ஏழு விக்கெட் இழப்புக்கு, 52 ரன்கள் எடுத்தனர். தி இந்தியன் பப்ளிக் பள்ளி அணியினர், 4.1 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு, 56 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர்.
காருண்யா கிறிஸ்டியன் பள்ளி அணியும், ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி அணியும் மோதின. பேட்டிங் செய்த காருண்யா கிறிஸ்டியன் பள்ளி அணி, 15 ஓவரில் நான்கு விக்கெட் இழப்புக்கு, 102 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய சைதன்யா அணியினர், 12.3 ஓவரில் நான்கு விக்கெட் இழப்புக்கு, 103 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர்.
வேதாந்தா அகாடமி அணியும், அல்கெமி பப்ளிக் பள்ளி அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த வேதாந்தா அகாடமி அணியினர், 15 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்புக்கு, 82 ரன்கள் எடுத்தனர்.
அடுத்து விளையாடிய அல்கெமி பப்ளிக் பள்ளி அணியினர் நான்கு விக்கெட் இழப்புக்கு, 83 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர். நாளை வரை போட்டிகள் நடக்கின்றன.