/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை தெற்கு வளர்ச்சி கூட்டமைப்பு உதயம்!
/
கோவை தெற்கு வளர்ச்சி கூட்டமைப்பு உதயம்!
ADDED : மார் 05, 2024 01:11 AM
போத்தனூர்;கோவை மாவட்ட தெற்கு பகுதியின் வளர்ச்சிக்கு குரல் கொடுக்க, 'கோவை தெற்கு வளர்ச்சிக்கூட்டமைப்பு' நேற்று உதயமானது.
கோவை மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகள், பெரும்பாலும் வடக்கு பகுதியை ஒட்டியே மேற்கொள்ளப்படுகின்றன. தெற்கு பகுதியில் ஏராளமான, பள்ளி, கல்லூரிகள், தொழிற்சாலைகள் இருந்தும், வளர்ச்சிக்கு குரல் கொடுக்க ஒரு தனி அமைப்பு எதுவுமில்லை. பல்வேறு அமைப்பினரும் அவரவர் பிரச்னைக்காகவே குரல் கொடுக்கின்றனர்.
இச்சூழலில், தெற்கு பகுதியின் வளர்ச்சிக்கு குரல் கொடுக்க, ஒரு அமைப்பை உருவாக்கும் முயற்சியில், ரத்தினம் கல்வி குழும தலைவர் மதன் செந்தில் முயற்சி மேற்கொண்டுள்ளார்.இவ்வமைப்பை துவக்குவதற்கான ஆலோசனை கூட்டம், நேற்று மதன் செந்தில் தலைமையில், ரத்தினம் கல்லூரி அரங்கில் நடந்தது.
இதில், குப்பை கிடங்கு, ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட், போத்தனூர் ரயில்வே ஸ்டேஷன் மேம்பாடு, மெட்ரோ ரயில் திட்டம், மதுக்கரை - - நீலம்பூர் பை-பாஸ் சாலையை, விரிவாக்கம் செய்தல் உள்ளிட்டவைகளுக்காக, குரல் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. ஒருங்கிணைப்பு குழு மதன் செந்தில் தலைமையில், சாமினாதன், மோகனசுந்தரராஜ், ஆனந்தகுமார், மணிலால் காந்தி, நல்லதம்பி, முருகேசன், விஜயகுமார் உட்பட, 11 பேர், ஆலோசனை குழு முன்னாள் கவுன்சிலர் துரை, பசுலுதீன், லட்சுமிநாராயணன், செல்வநாயகம், செல்வகுமார் ஆகியோருடன் அமைக்கப்பட்டது.

