/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேசிய கூடைப்பந்து போட்டி: கோவை மாணவியர் அபாரம் தமிழக அணி வெண்கலம் வென்று சாதனை

ADDED : பிப் 06, 2024 12:22 AM

கோவை;மும்பையில் நடந்த தேசிய அளவிலான மாணவியர் கூடைப்பந்து போட்டியில், கோவை மாணவியர் சிறப்பாக விளையாடி, தமிழக அணியின் வெற்றிக்கு உதவினர்.
இந்திய பள்ளிகளின் விளையாட்டு குழுமம் (எஸ்.ஜி.எப்.ஐ.,) சார்பில், தேசிய அளவில் 19 வயதுக்கு உட்பட்ட மாணவியருக்கான கூடைப்பந்து போட்டி, மும்பையில் நடந்தது.
இப்போட்டியில், நாட்டின் அனைத்து மாநில அணிகளும் பங்கேற்றன. தமிழகம் அணிக்கான தேர்வு, பி.எஸ்.ஜி., சர்வஜன பள்ளியில் நடந்தது.
இதில், கோவை பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் பள்ளி மாணவியர் சுபிக் ஷா, தேஷ்னா, ஜென்சி உட்பட 12 மாணவியர், தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்வு செய்யப்பட்ட மாணவியருக்கு, கிருஷ்ணம்மாள் பள்ளியில் பயிற்சி முகாம் நடைபெற்றது. பின்னர் பயிற்சியாளர்கள் சாஜூதீன் (கதிரி மில்ஸ் பள்ளி), சுமதி (கிருஷ்ணம்மாள் பள்ளி) ஆகியோர் தலைமையில் தமிழக அணியினர், தேசிய போட்டியில் பங்கேற்றனர்..
தேசிய போட்டியில் சிறப்பாக விளையாடிய, தமிழக மாணவியர் அரையிறுதிப்போட்டியில் 75 - 63 என்ற புள்ளிக்கணக்கில், மகாராஷ்டிரா அணியிடம் தோல்வியடைந்தனர்.
பின்னர் நடந்த மூன்றாமிடத்துக்கான போட்டியில், தமிழக அணியினர் 71 - 58 என்ற புள்ளிக்கணக்கில் ராஜஸ்தானை வீழ்த்தி, வெண்கலம் வென்றனர்.
தமிழக அணியின் வெற்றிக்கு உதவிய, கோவை மாணவியரை கூடைப்பந்து பயிற்சியாளர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்தினர்.