/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை அணிக்கு ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம்: மாநில சிலம்பம் போட்டியில் அசத்தல்
/
கோவை அணிக்கு ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம்: மாநில சிலம்பம் போட்டியில் அசத்தல்
கோவை அணிக்கு ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம்: மாநில சிலம்பம் போட்டியில் அசத்தல்
கோவை அணிக்கு ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம்: மாநில சிலம்பம் போட்டியில் அசத்தல்
ADDED : நவ 13, 2025 12:49 AM

கோவை: தமிழ்நாடு அமெச்சூர் சிலம்பம் சங்கம் மற்றும் கோவை மாவட்ட சிலம்பம் சங்கம் சார்பில், மாநில அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி, கற்பகம் பல்கலையில் நடந்தது.
கற்பகம் பல்கலை துணைவேந்தர் ரவி துவக்கி வைத்தார். பதிவாளர் பிரதீப் முன்னிலை வகித்தார். கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், தஞ்சாவூர், கன்னியாகுமரி உட்பட தமிழகத்தின் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களை சேர்ந்த, 600 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
ப்ரீ சப் ஜூனியர், சப் ஜூனியர், ஜூனியர், சீனியர் என, வெறுங்கை பாடம், கம்பு வீச்சு, வேல்கம்பு வீச்சு, ஒற்றை கம்பு வீச்சு, இரட்டை கம்பு வீச்சு, மான்கொம்பு வீச்சு, ஒற்றை சுருள் வீச்சு, இரட்டை சுருள் வீச்சு, வாள் வீச்சு, இரட்டை வாள் வீச்சு உட்பட, 13 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
கோவை மாவட்டத்தில் இருந்து, இந்திய தற்காப்புக் கலை மற்றும் விளையாட்டு சங்கம், சிலம்பாலயா பயிற்சி பள்ளி, இளந்தளிர் பயிற்சி பள்ளி, கற்பகம் பல்லைக்கழகம் உட்பட அணிகள் பங்கேற்றன.
ஒட்டுமொத்த சாம்பியன், ப்ரீ சப் ஜூனியர் பிரிவில், 126 புள்ளிகள் பெற்று கோவை அணி முதலிடம் பெற்றது. 85 புள்ளிகள் பெற்று, விருதுநகர் அணி இரண்டாமிடம் பெற்றது. சப் ஜூனியர் பிரிவில், 170 புள்ளிகள் பெற்று, கோவை அணி முதலிடம், 104 புள்ளிகள் பெற்று, நாமக்கல் அணி இரண்டாமிடம் பெற்றது.
ஜூனியர் பிரிவில், 115 புள்ளிகள் பெற்று, கோவை அணி சாம்பியன் பட்டம் பெற்றது. 74 புள்ளிகளுடன் திருப்பூர் அணி இரண்டாமிடம் பெற்றது. சீனியர் பிரிவில், 130 புள்ளிகள் பெற்று கோவை அணி சாம்பியன் பட்டம் பெற்றது. 65 புள்ளிகளுடன் கன்னியாகுமரி அணி இரண்டாமிடம் பெற்றது.
கற்பகம் பல்கலைக் கழக மாணவ, மாணவியர் 17 தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலம் பதக்கம் பெற்றது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு அமெச்சூர் சிலம்பம் சங்க நிறுவனர் செல்வராஜ், செயலாளர் ஐரின் செல்வராஜ் ஆகியோர், வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கினர்.
போட்டிக்கான ஏற்பாடுகளை, கற்பகம் பல்கலைக் கழக உடற்கல்வி இயக்குனர் சுதாகர் மேற்கொண்டார்.

