/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநில டேபிள் டென்னிஸ் போட்டியில் ஏழு பதக்கங்கள் குவித்த கோவை அணி
/
மாநில டேபிள் டென்னிஸ் போட்டியில் ஏழு பதக்கங்கள் குவித்த கோவை அணி
மாநில டேபிள் டென்னிஸ் போட்டியில் ஏழு பதக்கங்கள் குவித்த கோவை அணி
மாநில டேபிள் டென்னிஸ் போட்டியில் ஏழு பதக்கங்கள் குவித்த கோவை அணி
ADDED : மே 27, 2025 08:28 PM

கோவை : மாநில டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், கோவை வீரர்கள் குழு போட்டியில் ஐந்து பதக்கங்களும், தனி நபர் பிரிவில் இரு பதக்கங்களும் வென்று, பெருமை சேர்த்துள்ளனர்.
மாநில அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி, வேலுார் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் நான்கு நாட்கள் நடந்தது. இதில், கோவை, திருப்பூர், ஈரோடு உட்பட, 28 மாவட்டங்களை சேர்ந்த, 1,200க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
கோவையில் இருந்து, 13, 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில், 40 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில், குழு போட்டியில், 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் வெள்ளி பதக்கமும், 15 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் வெள்ளியும் வென்றனர்.
பெண்கள் 'ஓபன்' பிரிவில் வெண்கலமும், 19 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் வெண்கலமும், 17 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் வெண்கலமும் என, ஐந்து பதக்கங்களை குவித்துள்ளனர். அதேபோல், 17 வயதுக்குட்பட்ட பெண்கள் தனி நபர் பிரிவில், வீராங்கனை சுதேஷ்னா தங்கம் வென்றுள்ளார்.
13 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில், வீரர் சர்வேஷ் வெண்கலம் வென்றுள்ளார். கோவை வீரர், வீராங்கனைகள் மொத்தம் ஏழு பதக்கங்கள் குவித்து பெருமை சேர்த்துள்ளதாக, தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.