/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை டூ ராஜஸ்தான்; அக்., 10ல் விமான சுற்றுலா
/
கோவை டூ ராஜஸ்தான்; அக்., 10ல் விமான சுற்றுலா
ADDED : ஆக 31, 2025 11:30 PM
கோவை; கோவையில் இருந்து ராஜஸ்தானுக்கு விமானச் சுற்று லாவை, இந்திய ரயில்வே, உணவு, சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.,) அறிவித்துள்ளது. இச்சுற்றுலா அக்., 10ல் துவங்குகிறது. எட்டு இரவு, ஒன்பது பகல் அடங்கியது. ஜோத்பூர், ஜெய்சால்மர், பிகானேர், உதய்பூர், ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் உள்ள கோட்டைகள், அரண்மனைகள், அருங்காட்சியகங்கள், தார் பாலைவனம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை சுற்றிப்பார்க்க, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விமான கட்டணம், ஏ.சி., ஓட்டலில் தங்கும் வசதி, ஏ.சி., வாகன வசதி, உணவு (காலை மற்றும் இரவு) ஆகியவை அடங்கும். சுற்றுலா கட்டணம், 54 ஆயிரத்து, 950 ரூபாய். மத்திய, மாநில அரசு ஊழியர்கள் எல்.டி.சி., சலுகை பெறலாம். விவரங்களுக்கு, 90031 40655 என்ற எண்ணில் அல்லது, www.irctctourism.com என்ற இணைய தளத்தில் அறியலாம்.