தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கோயம்புத்தூர் மாவட்டம் நிகழ்ச்சி

கோயம்புத்தூர் மாவட்டம் நிகழ்ச்சி

கோயம்புத்தூர் மாவட்டம் நிகழ்ச்சி


UPDATED : அக் 10, 2026 07:33 PM

ADDED : அக் 10, 2026 07:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2026 07:33 PM ADDED : அக் 10, 2026 07:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மண்டல பூஜை



சீரநாயக்கன்பாளையம் மாரியம்மன் கோயில், சவுரிபாளையம் தண்டபாணி சுவாமி கோயில், சித்திவிநாயகர் கோயில் , காந்திபுரம் லாலாகார்னர் ஆகிய கோயில்களில் கும்பாபிஷேக விழா முடிந்து காலை 8 மணிக்கு மண்டல பூஜை நடந்து வருகிறது.

மலர் கண்காட்சி



அவிநாசி ரோட்டில், சி.ஐ.டி.கல்லுாரி எதிரே உள்ள மைதானத்தில் மலர் கண்காட்சி நடக்கிறது. மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும்.

துபாய் கண்காட்சி



துபாய் மிராக்கிள் கார்டன் கண்காட்சி வ.உ.சி. மைதானத்தில் நடக்கிறது. மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும்.

ஹஸதகலா எக்ஸ்போ



சுகுணா திருமண மண்டபம், அவிநாசி ரோட்டில், ஹஸ்டகலா எக்ஸ்போ நடக்கிறது. பல வகையான ஆடை, அணிகலன்கள், பேஷன் பொருட்கள் இடம்பெறும். காலை 11 முதல் இரவு 8 மணி வரை நடைபெறும்.

உடல் கட்டமைப்பு போட்டி



‘டீம் உல்ப்’ சார்பில் 5-வது உல்ப் கிளாசிக் மாநில அளவிலான ‘ஓப்பன் ஸ்டேட் பாடி பில்டிங்’ போட்டி நடக்கிறது. அவிநாசி சாலையில் உள்ள கோல்டு வின்ஸ், பிருந்தாவனா அரங்கில் மாலை 4 மணி முதல் நடைபெறும்.

இசை நிகழ்ச்சி



சுவிட்சர்லாந்தை சேர்ந்த வீணை கலைஞர் விதுஷி உமா குமார் பங்கேற்கும் நவராத்திரி சங்கீத் யாத்திர நிகழ்ச்சி பிருந்தாவன் பாம் குரோவில் நடக்கிறது. இதில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தெய்வங்களுக்கு இசை வழிபாடு நடக்கிறது.

நவராத்திரி திருவிழா



சித்தாபுதூர் ஐயப்பசுவாமி கோயிலில் நவராத்திரி திருவிழா நடக்கிறது. இதையொட்டி, காலை 7.30 முதல் 10 மணி வரை சூர்யோதய் ஸ்மைல் பவுண்டேசன் வழங்கும் கீர்த்தனாஞ்சலி, மாலை 6.30 முதல் 8.30 வரை நவரச நாட்டியாலயா வழங்கும் நாட்டியமாலை நடைபெறும்.

மாற்று திறனாளிகள் முப்பெரும் விழா



மாவட்ட அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு, துடியலூர் மணியன்குளம் காளியம்மாள் அறக்கட்டளை, இணைந்து நடத்துகிறது. சின்னவேடம்பட்டியில், ஜோதி மண்டபத்தில், காலை 9 முதல், மதியம் 2 மணி வரை நடைபெறும்.

நடன நிகழ்ச்சி



ராஜீவ்காந்தி நகர், ஸ்ரீ ராஜ கணபதி விநாயகர் கோயிலில் நவராத்திரி விழாவையொட்டி, மாலை 6.30 முதல், 8.30 மணி வரை ஷிவாஸ்டான்ஸ் அகாடமி சார்பில் நடன நிகழ்ச்சி நடக்கிறது.

மாதாந்திர கூட்டம்



செட்டிபாளையம் தாமரை கோவில், சச்சிதானந்தா ஆலயத்தின் 100-வது மாதாந்திர கூட்டம், அக்டோபர் மாத சொற்பொழிவு மாலை 6 மணிக்கு நடக்கிறது. “உண்மை ஒன்று” என்ற தலைப்பில் கவிதாசன் உரையாற்றுகிறார்.

ஓவிய கண்காட்சி



கஸ்தூரி ஸ்ரீனிவாசன் அறக்கட்டளையின் சார்பில் 6-வது ஆரோரா எனும் மதிநிறை செல்வன் வரைந்த ஓவியங்களின் கண்காட்சி ‘வைப்ரேஷன் ஆப் கலர்ஸ்’ என்ற தலைப்பில் துவங்குகிறது. அவிநாசி ரோடு, கஸ்தூரி ஸ்ரீனிவாசன் கலைக்கூடத்தில் காலை 10 முதல், 6.30 மணி வரை நடைபெறும்.

பரிசளிப்பு விழா



பெருமிழலை ஸ்ரீ குரும்ப நாயனார் ஆன்மிக மற்றும் சமூகநல அறக்கட்டளை சார்பில், 10, பிளஸ் 2 வகுப்புகளில் தேர்ச்சி பெற்ற குரும்பா இன மாணவ, மாணவியருக்கான பரிசளிப்பு விழா. குரும்பபாளையம் பச்சைநாயகி உடனமர் பட்டீஸ்வரர் கோவில் வளாகத்தில் காலை 10 மணிக்கு நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us