தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கோயம்புத்தூர் இன்றைய நிகழ்ச்சி 25/10/2026

கோயம்புத்தூர் இன்றைய நிகழ்ச்சி 25/10/2026

கோயம்புத்தூர் இன்றைய நிகழ்ச்சி 25/10/2026


ADDED : அக் 25, 2026 02:29 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 25, 2026 02:29 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உபன்யாஸம்



ராம் நகர் ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி தேவஸ்தானத்தில், பகவான் ரமண மஹரிஷி உபதேச சாரம் எனும் தலைப்பில் உமன்யாஸம் நடக்கிறது. ஸ்ரீமத் அபிநவ வித்யா தீர்த்த ப்ரவசன மண்டபத்தில் காலை 10 முதல் 12 மணி வரை நடக்கும்.

அன்னாபிஷேக விழா



கோணவாய்க்கால்பாளையம் அருள்மிகு செல்வ முத்துக்குமாரசுவாமி கோயிலில் வேதநாயகி உடனமர் வேதபுரீஸ்வரர் பெருமானுக்கு சிறப்பு அன்னாபிஷேகம் நடக்கிறது. காலை 7 மணிக்கு திருவாசகம் முற்றோதல், மாலை 4 மணிக்கு அன்னாபிஷேக அலங்கார பூஜை, 6 மணிக்கு சிறப்பு வேள்வி பூஜை, அபிஷேக அலங்கார பூஜைகள் நடக்கின்றன.

இலக்கிய விழா



கோவை செம்மொழித் தமிழ்மன்றம் சார்பில் இலக்கிய விழா அரசு மருத்துவமனை எதிரில் உள்ள பொறியாளர் அரங்கத்தில் காலை 10 மணிக்கு நடக்கிறது. கவிஞர் சோமதேவன் எழுதிய ‘இயல்பு கவிதைகள்’ நுால் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

விழிப்புணர்வு கூட்டம்



கோவை இயற்கை நலச் சங்கம் சார்பில் ஆரோக்கிய விழிப்புணர்வு கூட்டம் நடக்கிறது. மேட்டுப்பாளையம் ரோடு, அவினாசிலிங்கம் கல்லுாரி எதிரில், ராமலிங்கம் காலனியில் காலை 10 மணிக்கு நடக்கிறது.

கார் பந்தயம்



ஜே.கே. டயர் சார்பில் சி.டி.ஆர். ஜே.கே. டயர் எப்.எம்.எஸ்.சி.ஐ. இந்திய தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் 2026, செட்டிபாளையம் கரி மோட்டார் ஸ்பீட்வேயில் காலை 9.30 மணிக்கு நடக்கிறது.

மேபிளவர் அன்னபூர்ணா ஹைட்ஸ்



மேபிளவர் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின், கோவையின் முதல் பிரீமியம் மறுமேம்பாட்டுக் குடியிருப்புத் திட்டம் ‘மேப்ளவர் அன்னபூர்ணா ஹைட்ஸ்’ துவக்க விழா நடக்கிறது. சாய்பாபா காலனி, பாரதி பார்க் முதல் குறுக்கு வீதியில் காலை 10.30 மணிக்கு நடக்கிறது.

திறப்பு விழா



ஸ்ரீ கந்தவேல் ஜூவல்லர்ஸ் சார்பில் பிரம்மாண்ட வெள்ளி ஷோரூம் திறப்பு விழா நடக்கிறது. காந்திபுரம் கிராஸ் கட் ரோட்டில் காலை 10 மணிக்கு நடக்க உள்ளது.

ஷாப்பிங் விழா



ஹீமாஸ் கோ கிளாம் ஷாப்பிங் விழா, நவஇந்தியா சந்திப்பில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் நடக்கிறது. இதில் பல்வேறு நிறுவனங்களின் தயாரிப்புகள் மற்றும் பொருட்களை வாங்கலாம். அனுமதி இலவசம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us