ADDED : அக் 25, 2026 02:29 PM
பைக் திருட்டு
உக்கடம்: குனியமுத்துார் சஜீதா பேகம், பெரியகுளம் அருகே மீன் வாங்க தனது பைக்கை நிறுத்திவிட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது பைக் காணாமல் போனது தெரியவந்தது. புகாரின் பேரில், பெரியகடைவீதி போலீசார் விசாரிக்கின்றனர்.
தவறான சிகிச்சை; மருத்துவமனை மீது புகார்
டாடாபாத்: டாடாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில், கர்ப்பப்பையில் உள்ள சதை வளர்ச்சியை அகற்ற, சாய்பாபாகாலனியை சேர்ந்த தமினா நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், மாரடைப்பு ஏற்பட்டு கோமா நிலைக்கு சென்றதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஒரு நாள் சிகிச்சை என கூறி சேர்த்ததாகவும், நன்றாக இருந்த பெண் தவறான சிகிச்சையால் தான் கோமா நிலைக்கு சென்றதாக உறவினர்கள் குற்றம் சாட்டினர். மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க பெற்றோர், உறவினர்கள் சாய்பாபாகாலனி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
