/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரேஷன் கார்டு முழு விபர பதிவில் கோவை 'டாப்'
/
ரேஷன் கார்டு முழு விபர பதிவில் கோவை 'டாப்'
ADDED : ஏப் 29, 2025 06:18 AM
கோவை:
தமிழகத்தில் ரேஷன்கார்டு முழுவிபர பதிவில், கோவை மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.
தமிழகத்தில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களும் தங்கள் முழு விபரங்களை (இ.கே.ஒய்.சி.,), ரேஷன் கடைகளில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கான பணி, கடந்த மாதம் முதல் வாரத்தில் துவங்கியது. ரேஷன் கார்டில் பெயர் உள்ளவர்கள் இந்த மாதம், 30ம் தேதிக்குள் கைரேகை பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, கோவை மாவட்ட கூட்டுறவு சங்க துணைப்பதிவாளர் ராஜேந்திரன் கூறுகையில், ''கோவையை பொறுத்தவரை, 84 சதவீத கார்டுதாரர்கள் இ.கே.ஒய்.சி., பதிவு செய்துள்ளனர். ஒட்டுமொத்த தமிழகத்திலும், கே.ஒய்.சி., பதிவில், கோவைதான், 84 சதவீதம் பதிவு செய்துமுதலிடத்தில் உள்ளது.
மற்ற மாவட்டங்களில், இந்த அளவுக்கு கார்டுதாரர்கள் பதிவு செய்யவில்லை. இந்த மாத இறுதிக்குள், 90 சதவீத பதிவு முடிந்து விடும். அதற்கான பணியில் ரேஷன் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்,'' என்றார்.

