/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை வித்யாஸ்ரம் மாணவர் மலேசியாவில் சாதனை
/
கோவை வித்யாஸ்ரம் மாணவர் மலேசியாவில் சாதனை
ADDED : ஆக 31, 2025 07:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை :கோவை வித்யாஸ்ரம் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஸ்ரீஹரி, மலேசியாவில் நடந்த சர்வதேச புதுமை போட்டியில் கலந்துகொண்டார். மலேசியாவின், யுனிவர்சிட்டி கே பங்சனில் நடந்த போட்டியில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இறுதி போட்டியில், மாணவர் ஸ்ரீஹரி, தனது புதுமையான அறிவியல் திட்டத்திற்காக 'எப்.இ.டி., 100 புராஜக்ட்ஸ்' பிரிவில் வெற்றி பெற்றார்.
பள்ளிக்கு உலகளாவிய அங்கீகாரம் பெற்றுத் தந்த மாணவர் ஸ்ரீ ஹரி மற்றும் வழிகாட்டிய ஆசிரியர் மேகலாதேவியை, பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் வாழ்த்தினர்.

