sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 18, 2025 ,மார்கழி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அடுத்த 'பெங்களூரு ஆக மாறப்போகுது கோயமுத்தூரு! குடிநீர் பிரச்னையால் தவிக்குது பாரு!

/

அடுத்த 'பெங்களூரு ஆக மாறப்போகுது கோயமுத்தூரு! குடிநீர் பிரச்னையால் தவிக்குது பாரு!

அடுத்த 'பெங்களூரு ஆக மாறப்போகுது கோயமுத்தூரு! குடிநீர் பிரச்னையால் தவிக்குது பாரு!

அடுத்த 'பெங்களூரு ஆக மாறப்போகுது கோயமுத்தூரு! குடிநீர் பிரச்னையால் தவிக்குது பாரு!


ADDED : மார் 21, 2024 07:10 AM

Google News

ADDED : மார் 21, 2024 07:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : கோவை மாநகரில், குடிநீர் வினியோக இடைவெளி அதிகரித்துள்ள சூழலில், பெங்களூரு போல் இங்கும் குடிநீர் பிரச்னை வருவதை தவிர்க்க, பொது மக்கள் ஒவ்வொரு சொட்டு தண்ணீரையும் சேமிக்க வேண்டும்; சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

கோவை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக சிறுவாணி, பில்லுார் உள்ளிட்ட நீர் ஆதாராங்கள் உள்ளன. பருவ மழை பொய்த்து போனதால், அணைகளில் நீர் மட்டம் வெகுவாக சரிந்து வருகிறது.

குறிப்பாக, கோவை மாநகராட்சிக்கும், வழியோர கிராமங்களுக்கும் முக்கிய ஆதாரமாக இருக்கும் சிறுவாணி அணையின் நீர் மட்டம், 18.75 அடியாக சரிந்துவிட்டது.

இதன் மொத்த நீர் தேக்க உயரம், 50 அடி என்ற நிலையில், குடிநீர் தேவைக்காக தினமும், 4 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது.

பில்லுார் அணையின் மொத்த நீர் தேக்க உயரம், 100 அடி; தற்போது, 63 அடியாக குறைந்துள்ளது. பில்லுார், 1, 2, 3 திட்டங்களுக்கு தினமும், 40 கோடி லிட்டர் வரை தண்ணீர் எடுக்கப்படுகிறது.

வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், குளங்களில் நீர் மட்டம் குறைந்து வருகிறது. குடிநீர் வினியோக இடைவெளி, 15 நாட்களாக அதிகரித்தும், மறுபுறம் விவசாய தேவைக்கான தண்ணீர் இருப்பும் குறைந்து வருகிறது.

ஆழ்குழாய் கிணறுகளில் இருந்து, தண்ணீர் உறிச்சப்படுவதால் நிலத்தடி நீர்மட்டமும் கீழே செல்கிறது. பருவமழை கை கொடுத்தால் மட்டுமே, குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க முடியும்.

பெங்களூரு தந்த எச்சரிக்கை


தற்போது, கர்நாடக மாநிலம் பெங்களூருவில், தண்ணீர் தட்டுப்பாடு தலை விரித்தாடுவதால் சொந்த ஊர்களுக்கு பலர் திரும்பி வருகின்றனர். இதே போல், கோவை மாவட்டம், நவக்கரை, எட்டிமடை பகுதிகளிலும் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.

இதனால் அப்பகுதியில் உள்ள, ஒருசில கல்லுாரி நிர்வாகங்கள், விடுதி மாணவர்களை வீட்டுக்கே அனுப்பி விட்டன. குடிநீர் தட்டுப்பாடு சரியானபின் திரும்பினால் போதும் என அறிவுறுத்தியுள்ளன.

இதன் வாயிலாக, பெங்களூரு தாக்கம், செல்ல கோவை நகரையும் நெருங்கிக்கொண்டிருப்பதை எச்சரிக்கை மணியாக எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

கார், கார்டனில் வீண்


சூழ்நிலை தெரிந்தும் வீட்டு வாசல் கழுவுவதற்கு தண்ணீரை தாராளமாக செலவழிப்பது, வாகனங்களை கழுவுவது, கார்டனுக்கு பயன்படுத்துவது போன்ற சிலரின் பொறுப்பற்ற செயல், காண்போரை பதற வைக்கின்றன. மறுபுறம், தெருக்களில் பொதுக்குழாய்களில் வரிசை கட்டி குடங்களை வைத்துக்கொண்டு பாமர மக்கள் காத்திருக்கின்றனர்.

குளியல் அறை, சமையல் அறைகளில் இஷ்டத்துக்கு குழாயை திருப்பிவிட்டு சேமிப்பின் அவசியத்தை உணராமல் செயல்படுவது, பெரும் தண்ணீர் பஞ்சத்துக்கு வழிவகுக்கும் என்பதை மக்கள் உணர வேண்டும் என்கின்றனர் சூழல் ஆர்வலர்கள்.

சிறுதுளி உயர்மட்ட குழு உறுப்பினர் ராஜேஷ் கோவிந்தராஜூலு கூறுகையில், ''இருக்கும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். வீடுகளிலும், ஹோட்டல் போன்ற பொது இடங்களிலும் அளவாக பயன்படுத்த வேண்டும். வாகனங்களை வாரம் ஒருமுறை கழுவலாம். நீர் மேலாண்மை தொடர்பாக அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நீர் மேலாண்மை மையங்களையும் நிறுவ வேண்டும்,'' என்றார்.

வீட்டு வாசல் கழுவுவதற்கு தண்ணீரை தாராளமாக செலவழிப்பது, வாகனங்களை கழுவுவது, கார்டனுக்கு பயன்படுத்துவது போன்ற சிலரின் பொறுப்பற்ற செயல், காண்போரை பதற வைக்கின்றன. மறுபுறம், தெருக்களில் பொதுக்குழாய்களில் வரிசை கட்டி குடங்களை வைத்துக்கொண்டு பாமர மக்கள் காத்திருக்கின்றனர்.

நிலத்தடி நீருக்கும் ஆபத்து!

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் கூறுகையில்,''தற்போது அவசர நிலையில் உள்ளோம். அதல பாதாளத்துக்கு நிலத்தடி நீர் செல்கிறது. கடந்த காலங்களில், தென் மேற்கு பருவமழை கைகொடுக்காத நிலையில், வடகிழக்கு பருவமழை ஓரளவு பெய்தது. அதுவும் சமநிலை இல்லாததால், நிலத்தடி நீர் உயரவில்லை. கிடைக்கும் கோடை மழையை, குளங்களுக்கு செல்லும் வகையில் துார்வார வேண்டும். அனைத்து கட்டடங்களிலும், மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளதை, அரசு உறுதி செய்ய வேண்டும்,'' என்றார்.



கருத்து பகிர அவசியம் வாங்க!

உலக தண்ணீர் தின சிறப்பு விழிப்புணர்வு மாநாடு, கொங்குநாடு கலை அறிவியல் கல்லுாரியில் நாளை நடக்கிறது.நீரின்றி விலங்குகள் குடியிருப்பு பகுதிகளில் நுழைவது, மனித விலங்கு மோதல், நிலத்தடி நீர்மட்டம் குறைதல் போன்ற சூழல் சார்ந்த பிரச்னைகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், உலக தண்ணீர் தின சிறப்பு விழிப்புணர்வு மாநாடு, நொய்யலை மீட்போம் பயிற்சி பட்டறை, கொங்குநாடு கலை அறிவியல் கல்லுாரியில் நாளை நடக்கிறது. சிறுதுளி அமைப்பு, கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்ட சூழல் அமைப்புகள் சார்பில் நடக்கும் பயிற்சி பட்டறையில் பங்கேற்க, 80157 14790, 98438 18146 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.








      Dinamalar
      Follow us