/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ஸ்கேட்டிங்' போட்டியில் பதக்கங்கள் குவித்த கோவை
/
'ஸ்கேட்டிங்' போட்டியில் பதக்கங்கள் குவித்த கோவை
ADDED : ஏப் 16, 2025 10:26 PM

கோவை; தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில், கோவை வீரர்கள் 10 பதக்கங்கள் குவித்து பெருமை சேர்த்துள்ளனர்.
சென்னையில், தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டி நடந்தது. கேரளம், பெங்களூரு, கர்நாடகா, குஜராத், புதுச்சேரி, ஹரியானா மாநிலங்களில் இருந்து மாணவ, மாணவியர் ஏராளமானோர் பங்கேற்றனர். இதில், கோவையை சேர்ந்த நித்திகா சாய், 1,000 மீட்டரில் ஒரு வெள்ளிப் பதக்கமும், ரிலேவில் ஒரு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
அதேபோல், காளம்பாளையத்தை சேர்ந்த லக்ஷித் ஆதித்யா இரு தங்கம் மற்றும் டிராபி, கயல் மூன்று தங்கம் மற்றும் டிராபி, ரிலேவில் ஜிஸ்னு சாய் தங்க பதக்கமும், இளமித்ரன் தங்க பதக்கமும், குகன் ஆதித்யா தங்க பதக்கமும் வென்றுள்ளனர். வெற்றி பெற்றவர்களை பள்ளி நிர்வாகத்தினர், பயிற்சியாளர்கள் பாராட்டினர்.