/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை தொழிலாளி ஆற்றில் மூழ்கி பலி
/
கோவை தொழிலாளி ஆற்றில் மூழ்கி பலி
ADDED : நவ 02, 2024 06:47 AM
இடைப்பாடி; கோவை, பீளமேட்டை சேர்ந்தவர் பாபு, 47. இவர் தன் நண்பர்கள் ஸ்ரீஜித், 38, மதிவாணன், 51, செந்தில்குமார், 46, சுப்பிரமணியன், 50, முருகன், 55, வனராஜா, 51, நடராஜ், 42, ஆகியோருடன் காரில் நேற்று சுற்றுலா சென்றுள்ளனர்.
பல இடங்களுக்கு சென்று விட்டு நேற்று மதியம், 1:30 மணிக்கு பூலாம்பட்டி பகுதிக்கு வந்துள்ளனர். அப்போது மூன்று பேர் மட்டுமே காவரி ஆற்றில் குளித்துள்ளனர்.
பாபு தண்ணீரில் மூழ்கியுள்ளார். அப்பகுதி மக்கள், இடைப்பாடி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள், காவிரி ஆற்றில் மூழ்கிய பாபுவை ஒரு மணி நேரம் தேடி மதியம், 2:40 மணிக்கு இறந்த நிலையில் மீட்டனர். பீளமேடு பகுதியில் உள்ள லேத் பட்டறையில், பாபு கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு பிந்து, 40, என்ற மனைவி, பவிதா, 23, என்ற மகள், பிஜூ, 18, என்ற மகன் உள்ளனர். பூலாம்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

