/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையின் புதிய அடையாளம் ஜி.டி.நாயுடு மேம்பாலம்; நாளை திறக்கிறார் முதல்வர்
/
கோவையின் புதிய அடையாளம் ஜி.டி.நாயுடு மேம்பாலம்; நாளை திறக்கிறார் முதல்வர்
கோவையின் புதிய அடையாளம் ஜி.டி.நாயுடு மேம்பாலம்; நாளை திறக்கிறார் முதல்வர்
கோவையின் புதிய அடையாளம் ஜி.டி.நாயுடு மேம்பாலம்; நாளை திறக்கிறார் முதல்வர்
ADDED : அக் 08, 2025 07:18 AM

கோவை; கோவையின் பெருமைமிகு அடையாளம் என நாளை முடி சூட்டிக் கொள் ளப்போகும் அவிநாசி ரோடு உயர்மட்ட மேம்பாலத்துக்கு, ஜி.டி.நாயுடு பெயர் சூட்டப்படுவதாக, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கோவை, உப்பிலிபாளை யம் முதல் நீலாம்பூர் வரை யிலான, 16 கி.மீ., கொண்ட அவிநாசி சாலை, இந்நகரின் மத்திய ரேகையாக உள்ளது. இந்த சாலையில் நகரின் முக்கிய பள்ளிகள், கல்லுாரிகள், மருத்துவமனை, விமானநிலையம் அமைந்துள்ளன. போக்கு வரத்து நெரிசலை குறைக்க, அ.தி.மு.க. ஆட்சியில், அவிநாசி சாலையில் உயர் மட்ட மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. 2016 ஆக., 4ல் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
பழனிசாமி முதல்வராக இருந்தபோது, உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை ரூ.1621 கோடி ஒதுக்கப்பட்டு, 2020மார்ச் 24ல் நிர்வாக ஒப்புதல் தரப்பட்டது. 2021ல் ஆட்சி மாறியது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., ஆட்சியில், கூடுதல் தேவைகள் திட்டமிடப்பட்டு, பாலத்தின் மதிப்பீடு ரூ.1791.23 கோடியாக அதிகரிக்கப்பட்டது.
பாலத்தின் சிறப்புகள் நான்கு வழிப்பாதையான இந்த மேம்பாலத்தில், அண்ணாதுரை சிலை, நவ இந்தியா, ஹோப் காலேஜ், விமான நிலையம் ஆகிய நான்கு இடங்களில், ஏறு தளம் மற்றும் இறங்குதளம் அமைக்கப்பட்டுள்ளன. பாலத்தின் மத்தியில் 4 அடி அகலத்துக்கு சென்டர் மீடியன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தில், சைனஸ் பிளேட் விரிவு இணைப்பு என்ற புதிய தொழில்நுட்பம் பயன்படுத் தப்பட்டுள்ளது. பாலத்தில் பயணிக்கும்போது வழக்க மாக எழும் ஒலியின் அளவு, அதிர்வு குறைவாக இருக்கும் என, நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது.
மழை நீர் வடிகால் தமிழகத்திலேயே முதன் முறையாக, மழை நீர் சேகரிப்பு அமைப்பு இந்த பாலத்தில் முன்னோடி முயற்சியாக நிறுவப்பட்டுள்ளது. பாலத்தின் மீது பெய்யும் மழை நீர், குழாய் வழியாக வடிந்து, பாலத்தின் கீழே அமைக்கப்பட்டுள்ள 220 ஆழ்துளைகள் வாயிலாக நிலத்துக்குள் சென்று விடும்.
இதனால், நிலத்தடி நீர்மட்டம் உயரும். பாலம் கட்டுமானத்தில் 1.5 மீ., அகல நடைமேடையுடன் கூடிய வடிகால் அமைப்பு 13 ஆயிரத்து 560 மீ., நீளத்துக்கு திட்டமிடப்பட்டு, 9115 மீட்டருக்கு அமைக்கப்பட்டுள்ளது.
மேம்பாலத்துக்கு, ஜி.டி.நாயுடுவின் பெயரை சூட்டியுள்ள முதல்வர் ஸ்டாலின், நாளை (9ம் தேதி), கோவையில் கோல்டுவின்ஸ் பகுதியில் இருந்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்து, பயணம் செய்ய இருக்கிறார்.