/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையின் புதிய அடையாளம் செம்மொழி பூங்கா! தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்
/
கோவையின் புதிய அடையாளம் செம்மொழி பூங்கா! தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்
கோவையின் புதிய அடையாளம் செம்மொழி பூங்கா! தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்
கோவையின் புதிய அடையாளம் செம்மொழி பூங்கா! தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்
ADDED : நவ 25, 2025 06:59 AM

கோவை: கோவையின் புதிய அடையாளமாக, ரூ.208.50 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள செம்மொழி பூங்காவை, தமிழக முதல்வர் ஸ்டாலின், இன்று திறந்து வைக்கிறார்.
கோவையில் 2010ல் நடந்த உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில், அன்றைய முதல்வர் கருணாநிதி, காந்திபுரம் மத்திய சிறையை வேறிடத்துக்கு மாற்றி விட்டு, 'செம்மொழி பூங்கா' அமைக்கப்படும் என அறிவித்தார்.
உடனடியாக, நுழைவாயிலில் போர்டு வைக்கப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. 2021ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் உயிரூட்டப்பட்டது.
2021, நவ., 22ல் கோவை வ.உ.சி., மைதானத்தில் நடந்த அரசு விழாவில் பங்கேற்ற முதல்வர், இரண்டு கட்டமாக செம்மொழி பூங்கா அமைக்கப்படும் என அறிவித்தார்.
அதன்படி, மொத்தமுள்ள 165 ஏக்கர் பரப்பளவில் முதல்கட்டமாக 45 ஏக்கரில் பூங்கா உருவாக்க முடிவெடுக்கப்பட்டது. 2023 டிச., 18ல், முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நட்டு துவக்கி வைத்தார்.
90 சதவீத பணிகள் முடிக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று திறக்கப்படுகிறது. 208.50 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
இன்று முதல்வர் திறக்கிறார் தமிழகத்திலேயே வேறெங்கும் இல்லாத வகையில், அரிய வகை தாவரங்கள், செடி, கொடிகள், மர வகைகளுடன் செம்மொழி பூங்கா உருவாகியிருக்கிறது. பூங்காவை சுற்றிலும் 2.2 கி.மீ., துாரத்துக்கு நடைபயிற்சி செல்லும் வகையில், சுற்றுப்பாதை உருவாக்கப்பட்டுள்ளது.
இயற்கை பசுமை சுற்றுலா தலமாக உருவாக்கப்பட்டுள்ள, பூங்காவை திறந்து வைக்க, முதல்வர் ஸ்டாலின், இன்று கோவை வருகிறார்.
காலை 12:00 மணிக்கு கல்வெட்டு மற்றும் செயற்கை மலைக்குன்றை திறந்து வைத்து, ஏழு கடையேழு வள்ளல்களின் சிலைகளை பார்வையிடுகிறார்.
பின், பூங்காவை சுற்றிப்பார்க்கிறார். திறந்தவெளி அரங்கத்தில் கலைநிகழ்ச்சி நடக்கிறது. பள்ளி குழந்தைகள் மற்றும் வி.ஐ.பி.,களுடன் கலந்துரையாடுகிறார்.
'லீ மெரிடியன்' ஹோட்டலில், மாலை 5:00 மணிக்கு முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கிறது. இதில், 43 ஆயிரத்து, 844 கோடி ரூபாய் முதலீட்டில், ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும், புதிய தொழில்களுக்கான 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.

