/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இடிந்து விழும் நிலையில் துணை அஞ்சலக கட்டடம்
/
இடிந்து விழும் நிலையில் துணை அஞ்சலக கட்டடம்
ADDED : நவ 03, 2024 10:32 PM

வால்பாறை; இடிந்து விழும் நிலையில் உள்ள துணை அஞ்சலக கட்டடத்தை புதுப்பிக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறை அடுத்துள்ளது சின்கோனா 'டான்டீ' தேயிலை தோட்டம். இங்குள்ள முதல்பிரிவு டிவிஷனில், துணை அஞ்சலகம் கடந்த, 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படுகிறது.
மேற்கூரையில் ஓடுகள் வேயப்பட்ட நிலையில், கட்டடம் மிகவும் பழுதடைந்து, இடிந்து விழும் நிலையில் பரிதாபமாக காட்சியளிக்கிறது. எவ்வித பாதுகாப்பும் இல்லாத கட்டடத்தில், துணை அஞ்சலம் தொடர்ந்து செயல்படுகிறது.
இதனால், இங்கு பணிபுரியும் அதிகாரிகளுக்கும், வந்து செல்லும் வாடிக்கையாளர்களுக்கும் போதிய பாதுகாப்பில்லாத நிலை உள்ளது.
அஞ்சலக அதிகாரிகள் கூறியதாவது:
சின்கோனாவில் செயல்படும் துணை அஞ்சலகத்தில், அதிகளவில் வாடிக்கையாளர்கள் உள்ளனர். சுற்று வட்டாரப்பகுதியில் வங்கிகள் எதுவும் இல்லாத நிலையில், இப்பகுதி தொழிலாளர்கள், பள்ளி மாணவர்கள் அதிக அளவில் அஞ்சலகத்தில் சேமிப்புக்கணக்கு துவங்கியுள்ளனர்.
இது தவிர, தங்கமகள் சேமிப்பு திட்டம், இன்சூரன்ஸ், டெபாசிட் தொகைகளையும் அஞ்சலகத்தில் செலுத்தி வருகின்றனர். திறந்தவெளியில் உள்ள துணை அஞ்சலகத்தில் இரவு நேரத்தில் சிறுத்தையும், பகல் நேரத்தில் பாம்புகளும் புகுந்து விடுகின்றன.
மிகவும் பழமையான இந்த கட்டடத்தை 'டான்டீ' நிர்வாகத்தின் சார்பில் புதுப்பித்து கொடுத்தால், வாடிக்கையாளர்கள் அச்சமின்றி அஞ்சலகத்திற்கு வந்து செல்வார்கள்.
இவ்வாறு, கூறினார்.