/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
அனைத்து மசாலா பொடிகளின் மாதிரி பரிசோதனைக்கு சேகரிப்பு
/
அனைத்து மசாலா பொடிகளின் மாதிரி பரிசோதனைக்கு சேகரிப்பு
அனைத்து மசாலா பொடிகளின் மாதிரி பரிசோதனைக்கு சேகரிப்பு
அனைத்து மசாலா பொடிகளின் மாதிரி பரிசோதனைக்கு சேகரிப்பு
PUBLISHED ON : நவ 22, 2025 07:10 AM
கோவை: மசாலா பொடிகளில் பூச்சிக்கொல்லி மருந்துகள் கலப்பு சார்ந்த புகாரை தொடர்ந்து, கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில், அனைத்து பிராண்டு மசாலா பொடிகளின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வக முடிவுகளின் படி, பிரபல நிறுவனங்களின் மிளகாய் பொடி, மஞ்சள் பொடி உணவு பாதுகாப்பு தரநிலைக்கு தகுதியானவை இல்லைஎன்று முடிவுகள் வந்துள்ளன.
இதுகுறித்த செய்தி, நமது நாளிதழில் வெளியிடப்பட்டது.
மசாலா பொடிகளில், அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும், காப்பர் ஆக்சிகுளோரைடு, காப்பர் ஹைட்ராக்சைடு, காப்பர் சல்பேட், குப்ரஸ் ஆக்சைடு, பொடியில் சைபர்மெத்ரின், தியாமெதோக்சம் உள்ளிட்ட பல்வேறு பூச்சிக்கொல்லி கலந்து இருப்பது, ஆய்வக முடிவுகளின்படி தெரியவந்துள்ளது.
மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அனுராதா கூறுகையில், ''மசாலா பொடிகளில் பூச்சிக்கொல்லி கலப்பு சார்ந்து வெளியான செய்தியை தொடர்ந்து, அனைத்து பிராண்டு மசாலா பொடிகளின் மாதிரியும் சேகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பரிசோதனைக்கு அனுப்பி முடிவுகள் தெரிந்த பின், நடவடிக்கை எடுக்கப்படும்.
உள்ளூர் பகுதி உற்பத்தியாளர்களுக்கு நேரடியாகவும், வெளியூர் உற்பத்தி யாளர்களாக இருப்பின், அந்தந்த பகுதி உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களுக்கும் தகவல் அளிக்கப்படும்,'' என்றார்.

