/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாக்காளர் பெயர் பட்டியலில் இடம் பெற பூர்த்தியான படிவங்களை ஒப்படையுங்கள் பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

ADDED : நவ 13, 2025 01:21 AM
கோவை: வாக்காளர் பட்டியலில் தகுதியான வாக்காளர்கள், ஒவ்வொருவரது பெயரும் இடம் பெற, வாக்காளர்கள் தங்களிடம் வழங்கப்படும் படிவங்களை பூர்த்தி செய்து, பத்திரமாக திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று, கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கலெக்டர் பவன்குமார் அறிக்கை:
இந்திய தேர்தல் கமிஷனின் உத்தரவுப்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத்திருத்த முறை தற்போது நடந்து வருகிறது. டிச.,4 அன்று முடிவடைகிறது. வாக்காளர்களிடம் ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள் வாக்காளர்களிடம் படிவங்களை வழங்கி, திரும்ப பெறுவர்.
கோவை மாவட்டத்தில் 3,117 ஓட்டுச்சாவடிகளுக்கு தலா, ஒரு நிலைய அலுவலர் வீதம், 3,117 ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்களை கண்காணிக்க, 316 ஓட்டுச்சாவடி நிலைய கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கலெக்டர் அலுவலகத்தில், 1950 என்ற தானியங்கி போன் எண்ணை, இலவசமாக தொடர்பு கொண்டு, சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம்.
வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களை, பூர்த்தி செய்து ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்களிடம் வழங்கினால் மட்டுமே, டிச.,9ல் வெளியாகும் வரைவு வாக்காளர் பட்டியலில், வாக்காளர் பெயர் இடம் பெறும்.
வாக்காளர்களின் ஏற்புரை மற்றும் மறுப்புரைகளை, டிச.,9 முதல் அடுத்த ஆண்டு ஜன., 8 வரை அளிக்கலாம். இறுதி வாக்காளர் பட்டியல், பிப்.,7 அன்று வெளியிடப்படும். வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் இடம் பெறுவதை, தகுதியான வாக்காளர்கள் உறுதி செய்யவேண்டும்.
இவ்வாறு, கலெக்டர் கூறியுள்ளார்.