/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இன்ஜி., கல்லூரி மாணவர் சாலை விபத்தில் மரணம்
/
இன்ஜி., கல்லூரி மாணவர் சாலை விபத்தில் மரணம்
ADDED : நவ 13, 2025 01:20 AM
போத்தனூர்: ஒத்தக்கால்மண்டபத்திலுள்ள தனியார் இன்ஜி., கல்லூரி மாணவர், திருநெல்வேலியை சேர்ந்த வருண், 20. இவர் தனது நண்பரான பிரகதீஸ்வரர் என்பவரை, காந்திபுரத்தில் விட்டுவிட்டு, பைக்கில் வந்து கொண்டிருந்தார்.
கோவை --- பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில், ஈச்சனாரி அடுத்த தனியார் பல்கலையை கடந்து செல்லும்போது எதிர்பாராவிதமாக பைக், சாலையின் இடதுபுற இரும்பு தடுப்பில் மீது மோதியது. வருண் படுகாயமடைந்தார்.
அவ்வழியே வந்த, அதே கல்லூரியை சேர்ந்த இருவர் விபத்தை கண்டு, 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் தெரிவித்தனர். அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வருணை பரிசோதித்த டாக்டர்கள், வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக கூறினர். மதுக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.

