/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அனுமானின் தாகம் தணித்த அனுவாவி
/
அனுமானின் தாகம் தணித்த அனுவாவி
ADDED : நவ 13, 2025 01:20 AM
கோவையிலிலுள்ள புகழ் பெற்ற மலைக்கோயில்களில், அனுவாவி சுப்பிரமணியர் கோயிலும் ஒன்று. மரங்கள் நிறைந்த அடர்ந்த வனப்பகுதியில், பெரிய தடாகத்திலுள்ள மேற்குத்தொடர்ச்சி மலையில் இக்கோயில் அமைந்துள்ளது.
சஞ்சீவி மலையை இலங்கைக்கு எடுத்து செல்லும்போது, அனுமானுக்கு தாகம் ஏற்பட்டதாகவும், தாகத்தை தணிக்க முருகப்பெருமான், தனது வேலால் நீரூற்றை ஏற்படுத்தியதாகவும், அது அவரது தாகத்தைதணித்ததாகவும் ஐதீகம்.
அனு என்பது அனுமானையும், வாவி என்பது நீர் என்ற பொருளையும் குறிப்பதால், இவ்விடம் 'அனுவாவி' என்று பெயர் பெற்றதாக கூறப்படுகிறது.
அடிவாரத்திலிருந்து மலை உச்சி வரை, 500 படிகள் உள்ளன. மலை உச்சியில் வள்ளி, தெய்வானை சமேதராக சுப்ரமணிய சுவாமியை தரிசிக்கலாம்.
கோயில் வளாகத்தில் வடக்கு நோக்கி, ஒரு மிகப்பெரிய அனுமான் சிலையும், ஒரு துணை சன்னதியில் அனுமான் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
முருகப்பெருமான், அனுமனுடன் தொடர்புடைய அரிய கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.இங்கு சூரசம்ஹாரம், வைகாசி விசாகம், பங்குனி உத்திரம் மற்றும் கிருத்திகை ஆகியவை, சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
திருமணத்தடையை விலக்குகிறார், தம்பதியருக்கு குழந்தைப்பேறு வழங்குகிறார் என்றெல்லாம் இக்கோயில் மீது பக்தர்களுக்கு அளவு கடந்த நம்பிக்கை உள்ளது.அனுவாவி கோயில், தற்போது அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

