ADDED : செப் 18, 2026 02:31 PM
வால்பாறை: சுற்றுலா பயணியரை மகிழ்விக்கும் வகையில் அருவியில் குளிக்க அனுமதிக்க வேண்டும், என, ஏ.ஐ.டி.யு.சி., கோரிக்கை விடுத்துள்ளது.
வால்பாறை, ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்கத்தின் தாலுகா பொதுச்செயலாளர் மோகன், கோவை கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
சுற்றுலா பயணியர் அதிகளவில் வந்து செல்லும் வால்பாறையில், சுற்றி பார்க்கும் இடங்களில் போதிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக, வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சக்தி தலநார் வியூபாயின்ட், சின்னக்கல்லாறு, நல்லமுடி காட்சிமுனை, வாட்டர்பால்ஸ் செல்பி பாயின்ட் உள்ளிட்ட பகுதிகளில், போதிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும். படகுசவாரியை மீண்டும் துவங்க வேண்டும்.
வால்பாறையில், தற்போது மழைப்பொழிவு வெகுவாக குறைந்து வரும் நிலையில், அருவி மற்றும் ஆறுகளில் சுற்றுலா பயணியர் குளிக்க, மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
