/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுற்றுலா பயணச்சந்தை வாய்ப்பு பயன்படுத்த கலெக்டர் அழைப்பு
/
சுற்றுலா பயணச்சந்தை வாய்ப்பு பயன்படுத்த கலெக்டர் அழைப்பு
சுற்றுலா பயணச்சந்தை வாய்ப்பு பயன்படுத்த கலெக்டர் அழைப்பு
சுற்றுலா பயணச்சந்தை வாய்ப்பு பயன்படுத்த கலெக்டர் அழைப்பு
ADDED : மார் 18, 2025 05:39 AM
கோவை, தமிழக அரசின் சுற்றுலாத்துறை சார்பில், தமிழ்நாடு சுற்றுலாப் பயணச் சந்தை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில், வரும் 21 முதல் 23ம் தேதி வரை நடக்கிறது.
தமிழகத்தின் இணையற்ற சுற்றுலா அனுபவங்களுடன், உலகளாவிய பயணத்துறை, ஆழமான கலாசார சந்திப்புகள், உற்சாகமான வணிக வாய்ப்புகள் ஆகியவற்றை இப்பயண சந்தை இணைக்கிறது.
தொழில்துறை தலைவர்கள் மற்றும் வல்லுநர்கள், புதிய தொழில் முதலீட்டாளர்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து, ஒத்துழைப்பு மற்றும் எதிர்கால திட்டத்தை வடிவமைக்கும் தளமாக செயல்படும், இப்பயணச் சந்தையில், கலந்துரையாடல், சிறப்பு சொற்பொழிவுகள் மற்றும் வியாபார கண்காட்சி ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த அரிய வாய்ப்பபில், கோவையை சார்ந்த சுற்றுலாத் தொழில் நிறுவனங்களான ஹோட்டல், பயண முகவர்கள் மற்றும் பயண ஏற்பாட்டாளர்கள் பங்கேற்று, தங்களது நிறுவனம் சார்ந்த தகவல் அரங்குகளை அமைத்து, சுற்றுலா வியாபார ஈர்ப்பை நமது பகுதிக்கு பெருகிட செய்ய வேண்டும் என, கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
தங்களது வியாபார அரங்குகள் அமைப்பது தொடர்பான தகவலுக்கு, 94448 23111, 91769 95863 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, மாவட்ட சுற்றுலா அலுவலர் ஜெகதீஸ்வரி அழைப்பு விடுத்துள்ளார்.