/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரேஷன் பொருள் குடோன்; கலெக்டர் திடீர் ஆய்வு
/
ரேஷன் பொருள் குடோன்; கலெக்டர் திடீர் ஆய்வு
ADDED : மார் 19, 2025 08:54 PM

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் தாலுகாவில் உள்ள ரேஷன் கடைகளுக்கு, ரேஷன் பொருட்கள் சப்ளை செய்யும், தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழக குடோனை, கலெக்டர் பவன்குமார் ஆய்வு செய்தார்.
மேட்டுப்பாளையத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தை, கலெக்டர் பவன்குமார் துவக்கி வைத்தார். பின், காரமடை சாலையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக குடோனுக்கு சென்றார். அங்கு அதிகாரியிடம், 'இங்கிருந்து எத்தனை ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் அனுப்பப்படுகிறது' என கேட்டார். அதற்கு அதிகாரி, '157 ரேஷன் கடைகளுக்கு, ரேஷன் பொருட்கள் அனுப்பப்படுகின்றன' என்றார். குடோனில் அடுக்கி வைத்திருந்த மூட்டைகளில் இருந்து, அரிசி, பருப்பு, கோதுமை ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
பின் பாரதிநகர் ரேஷன் கடைக்கு சென்று, பொதுமக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் பொருட்களை ஆய்வு செய்தார்.
மணி நகரில் உள்ள நகராட்சி நூலகம் மற்றும் அறிவு சார் மையத்தையும், விளாமரத்தூர் குடிநீர் திட்டப் பணிகளையும் ஆய்வு செய்தார்.