தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பறக்கும் படை பணிகளை ஆய்வு செய்த கலெக்டர் 

 பறக்கும் படை பணிகளை ஆய்வு செய்த கலெக்டர் 

 பறக்கும் படை பணிகளை ஆய்வு செய்த கலெக்டர் 


ADDED : மார் 18, 2026 09:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 18, 2026 09:50 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி: தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து, பொள்ளாச்சி சட்டசபை தொகுதியில் தேர்தல் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. விதிமுறை மீறல், பணம், பரிசு பொருட்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்படுகிறதா, முறையான ஆணவங்களுடன் பணம் மற்றும் பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு செய்யப்படுகிறது.

இதுவரை, முறையான ஆணவங்களின்றி கொணடு வரப்பட்ட, 12 லட்சத்து, 37 ஆயிரத்து, 670 ரூபாய் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில், பறக்கும்படை, நிலையான தணிக்கை குழுவினரின் பணிகளை, மாவட்ட கலெக்டர் பவன்குமார் ஆய்வு செய்தார். ஆய்வின்போது, பணிகளை கவனமாக மேற்கொள்ள வேண்டும். ஆவணங்களின்றி பொருட்கள் கொண்டு வரப்படுகிறதா, விதிமுறை மீறல்கள் உள்ளதா என கண்காணிப்பு செய்ய வேண்டும். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் சோதனைகள் இருக்க கூடாது, என, அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us