/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நகராட்சி பகுதிகளில் கலெக்டர் ஆய்வு
/
நகராட்சி பகுதிகளில் கலெக்டர் ஆய்வு
ADDED : ஜூன் 17, 2025 09:28 PM
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் உள்ள கூடலூர் நகராட்சி, பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளில் கலெக்டர் பவன்குமார் ஆய்வு மேற்கொண்டார்.
பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட திடக்கழிவு மேலாண்மை மையத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு திடக்கழிவு மேலாண்மை பணிகளை கலெக்டர் பவன்குமார் பார்வையிட்டார். அம்ரித் திட்டத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்து, திட்டத்தை வேகப்படுத்த அவர் ஆலோசனை வழங்கினார்.
பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட குப்பிச்சிபாளையம் அருகே உள்ள ஹவுசிங் யூனிட் பகுதியில் ஆய்வு செய்த போது, அங்கிருந்த பொதுமக்கள் குப்பைகளை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.
ஹவுசிங் யூனிட் பகுதி பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சியிடம் ஒப்படைக்கா விட்டாலும், குப்பைகளை பேரூராட்சி நிர்வாகம் அகற்ற வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுகளை கலெக்டர் மேற்கொண்டார்.