ADDED : ஜூன் 25, 2026 02:04 AM
அ நிறம் | அளவு
சுந்தராபுரம்: சுந்தராபுரம் மாச்சம்பாளையத்தில் சமூக நீதி மாணவர் விடுதி உள்ளது. இவ்விடுதியில் அடிப்படை வசதிகள், உணவின் தரம் குறித்து கலெக்டர் பவன்குமார் நேற்று ஆய்வு செய்தார்.
மாணவர்களின் வருகை பதிவேடு, உணவு பொருட்களின் இருப்பு விவரம், விளையாட்டு உபகரணங்களை பார்வையிட்டார். மாணவர்களின் தேவைகளை கேட்டறிந்தார். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் லட்சுமி, கிணத்துக்கடவு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மோகன்பாபு உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
