ADDED : ஜூன் 25, 2026 02:04 AM
கோவை: ஏ.ஐ.டி.யு.சி., துாய்மை பணியாளர் சங்கம் சார்பில், தெற்கு தாலுகா அலுவலகம் முன் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஏ.ஐ.டி.யு.சி., மாநில துணைத்தலைவர் செல்வராஜ் கூறுகையில், ''தமிழக அரசு 12 மாநகராட்சியில் பொதுமக்கள், தனியார் பங்களிப்பில் திடக்கழிவு மேலாண்மை பணிகளை ஒப்படைப்பது குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்துள்ளது. இது கண்டனத்துக்குரியது. துாய்மை பணியாளர் பணிகளில் ஒப்பந்த முறை கூடாது.
துாய்மை பணியில் உள்ள அனைத்து ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
தேர்தல் நேரத்தில் த.வெ.க. துாய்மை பணியாளர்கள் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்ததோடு, ஒப்பந்த முறையை எதிர்த்தது. தற்போது ஆட்சிக்கு வந்த பிறகு மீண்டும் ஒப்பந்த முறையை கொண்டு வருவதை ஏற்க முடியாது. இதை எதிர்த்து ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கம் போராட்டம் நடத்தும்,'' என்றார்.
