ADDED : ஆக 28, 2025 10:52 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, உயர் தொழில்நுட்ப பசுமை குடிலை, மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.
பொள்ளாச்சி அருகே, ஜமீன் ஊத்துக்குளியில் விவசாயி செல்வராஜ் என்பவர், தேசிய தோட்டக்கலை இயக்கம் திட்டத்தின் கீழ், உயர் தொழில்நுட்ப பசுமை குடில் அமைத்துள்ளார்.
அரசின், 16 லட்சத்து, 88 ஆயிரம் ரூபாய் மானியத்துடன், மொத்தமாக, 45 லட்சம் ரூபாய் செலவில் பசுமை குடில் அமைத்து, வெள்ளரி சாகுபடி செய்துள்ளார். இந்த பசுமை குடிலை மாவட்ட கலெக்டர் பவன்குமார் ஆய்வு செய்து, மகசூல் உள்ளிட்ட விபரங்களை கேட்டார்.
விவசாயி கூறுகையில், '120 நாட்கள் பயிர்காலமாகும். 55 - 60 நாட்களில் அறுவடை துவங்குகிறது. 40 - 45 டன் வரை மகசூல் கிடைக்கும்,' என தெரிவித்தார்.
ஆய்வின் போது, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சித்தார்த்தன், உதவி இயக்குனர் சவுமியா, விவசாயிகள் உடன் இருந்தனர்.