/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உளவியல் படித்தவர்களை அழைக்கிறார் கலெக்டர்
/
உளவியல் படித்தவர்களை அழைக்கிறார் கலெக்டர்
ADDED : ஜூன் 15, 2025 10:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; அரசு கூர்நோக்கு இல்லங்களில் தங்கியிருக்கும் சிறார்களுக்கு, உளவியல் ஆலோசனை மற்றும் மனதை ஆற்றுப்படுத்தும் சேவை வழங்க, உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கோவை கலெக்டர் அறிக்கை:
சென்னை மற்றும் செங்கல்பட்டில், சிறுவர் கூர்நோக்கு இல்லங்களில் தங்கியிருக்கும் சிறார்களுக்கு, உளவியல் ஆலோசனை மற்றும் மனதை ஆற்றுப்படுத்தும் சேவை வழங்க, மதிப்பூதிய அடிப்படையில் ஆட்கள் நியமிக்கப்படவுள்ளனர். உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதலில், முதுகலைப்பட்டம் பெற்ற நபர்கள், வரும் 27க்குள் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு, கலெக்டர் கூறியுள்ளார்.