ADDED : ஜூலை 06, 2025 10:52 PM

கிணத்துக்கடவு; முதன்மை கல்வி நிறுவனங்களில் வாய்ப்பு பெற்ற, கிணத்துக்கடவு அரசு பள்ளி மாணவர்களை மாவட்ட கலெக்டர் பாராட்டினார்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டல் வாயிலாக, முதன்மை கல்வி நிறுவனங்களில் சேர கிணத்துக்கடவு அரசு பள்ளி மாணவர்கள் தேர்வாகியுள்ளார்.
இதில், பிருந்தா என்ற மாணவி என்.சி.ஹெச்.எம்., (நேஷனல் கவுன்சில் பார் ேஹட்டல் மேனேஜ்மென்ட் அண்டு கேட்ரிங் டெக்னாலஜி) நுழைவு தேர்வு வாயிலாக ஐ.ஹெச்.எம்., (இன்ஸ்டிடியூட் ஆப் ேஹாட்டல் மேனேஜ்மென்ட்) சென்னையிலும், தனுஸ்ரீ மற்றும் சுஜாதா மாணவியர் எப்.டி.டி.ஐ.ஏ.ஐ.எஸ்.டி., (புட்வேர் டிசைன் அண்டு டெவலப்மென்ட் இன்ஸ்டிடியூட்) நுழைவுத் தேர்வு வாயிலாக பி.டெஸ்., (பேச்சுலர் ஆப் டிசைன்) படிப்பிற்கு தேர்வாகியுள்ளார்.
மாணவி பிரியதர்ஷினி என்.ஐ.எப்.டி., (நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி) தேர்வு வாயிலாக, இரு நிலைகளில் தேர்வு பெற்று கலந்தாய்வுக்கு தகுதி பெற்றுள்ளார்.
இவர்களை மாவட்ட கலெக்டர் பவன்குமார் நேரில் அழைத்து பாராட்டினார். மேலும் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கிய ஆசிரியர்களுக்கும் வாழ்த்து கூறினார்.
