/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாக்காளர் பட்டியல் திருத்த பணியில் சுணக்கம் கூடாது: அதிகாரிகளுக்கு கலெக்டர் எச்சரிக்கை
/
வாக்காளர் பட்டியல் திருத்த பணியில் சுணக்கம் கூடாது: அதிகாரிகளுக்கு கலெக்டர் எச்சரிக்கை
வாக்காளர் பட்டியல் திருத்த பணியில் சுணக்கம் கூடாது: அதிகாரிகளுக்கு கலெக்டர் எச்சரிக்கை
வாக்காளர் பட்டியல் திருத்த பணியில் சுணக்கம் கூடாது: அதிகாரிகளுக்கு கலெக்டர் எச்சரிக்கை
ADDED : நவ 20, 2025 02:34 AM
கோவை: வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப்பணிகளில், தொய்வு ஏற்படக்கூடாது என்று அதிகாரிகளுக்கு கோவை கலெக்டர் எச்சரிக்கை விடுத்தார்.
கோவை மாவட்டத்திலுள்ள பத்து சட்டசபை தொகுதிகளில் உள்ள வாக்காளர்களை காட்டிலும் கவுண்டம்பாளையம் சட்டசபை தொகுதியில் இரண்டு மடங்கு வாக்காளர்கள் உள்ளனர்.
இத்தொகுதியில் 2,48,533 ஆண் வாக்காளர்களும், 2,53,012 பெண் வாக்காளர்களும், 166 மூன்றாம் பாலினத்தவர்கள் என்று, 5,01,711 வாக்காளர்கள் உள்ளனர்.
மற்ற தொகுதிகளை காட்டிலும் அதிக வாக்காளர்கள் இருப்பதால், பணிகளில் தொய்வு ஏற்படும் என்று முன்னதாகவே திட்டமிட்டு, அதிகாரிகள் வழக்கத்தை காட்டிலும் அதிக எண்ணிக்கையில் நியமிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
கடந்த சில தினங்களுக்கு முன், கலெக்டர் பவன்குமார் தலைமையில் கவுண்டம்பாளையம் தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப்பணி குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது.
கலெக்டர் கேட்ட கேள்விகளுக்கு அதிகாரிகள் தரப்பிலிருந்து சரியான பதில் வராததை தொடர்ந்து கலெக்டர் பணிகளில் தேக்கமோ, சுணக்கமோ இருக்கக்கூடாது என்றார்.
தேவைக்கு தகுந்தாற்போல் பணிக்கு ஏற்ப கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்படுவர், பணிகள் வேகப்படுத்தப்பட வேண்டும் விரைவாக முடிக்க வேண்டும். வாக்காளர் படிவங்களை ஸ்கேன் செய்வதற்கு தேவையான, அதிக திறன் கொண்ட இன்டர் நெட் வசதியை உடனுக்குடன் ஏற்படுத்திக்கொடுத்தார்.
பணியாளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்திக்கொடுக்கப்படும் என்று கூறினார். பணியில் சுணக்கமாக இருப்பதற்கு காரணமான அதிகாரிகளையும், பணியாளர்களையும் அழைத்து அறிவுரை கூறினார்.
பணியில் அசட்டையாக இருக்கும் சிலருக்கு எச்சரிக்கையும் விடுத்தார். இதையடுத்து கவுண்டம்பாளையம் தொகுதியில், நேற்று முதல் பணிகள் வேகம் பெற்றுள்ளது,
கலெக்டர் பவன்குமார் கூறியதாவது:
தமிழகத்திலேயே இரண்டாவது பெரிய தொகுதி. இத்தொகுதியில் மொத்தம் 451 பூத்கள் உள்ளன. பத்து பூத்களின் ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு ஒரு மேற்பார்வை நிலையில் தாசில்தார் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது போன்று மொத்தம் 45 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்பணிகளை ஒட்டுமொத்தமாக மேற்பார்வை மற்றும் கண்காணிப்பதற்காக டிட்கோ (தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம்) டி.ஆர்.ஓ. விஜயராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு கீழே கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், வடக்கு தாசில்தார் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இது தவிர இத்தொகுதிக்கு மட்டும் ,15 தாசில்தார்கள் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பணிகளை விரைவாகவும் நேர்த்தியாகவும் முடிக்க வேண்டும் என்பதே நோக்கம்.
இவ்வாறு, கலெக்டர் கூறினார்.

