/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆய்வுக்கு சென்று ஆசிரியராக மாறிய கலெக்டர்! அரசு பள்ளி மாணவர்கள் உற்சாகம்
/
ஆய்வுக்கு சென்று ஆசிரியராக மாறிய கலெக்டர்! அரசு பள்ளி மாணவர்கள் உற்சாகம்
ஆய்வுக்கு சென்று ஆசிரியராக மாறிய கலெக்டர்! அரசு பள்ளி மாணவர்கள் உற்சாகம்
ஆய்வுக்கு சென்று ஆசிரியராக மாறிய கலெக்டர்! அரசு பள்ளி மாணவர்கள் உற்சாகம்
ADDED : பிப் 20, 2025 06:47 AM

வால்பாறை: வால்பாறையில், ஆய்வுக்காக சென்ற கோவை மாவட்ட கலெக்டர், பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்தி, கேள்வி கேட்டு, பரிசு வழங்கினார்.
வால்பாறையில் தமிழக அரசின், 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்ட முகாம் நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட கலெக்டர் பவன்குமார் தலைமை வகித்தார். நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி, பொள்ளாச்சி நகராட்சி கமிஷனர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட கலெக்டர் தலைமையில், சப்-கலெக்டர், அரசு துறை அதிகாரிகள் வால்பாறையில் பல்வேறு பகுதிகளை நேரில் ஆய்வு செய்தனர். மார்க்கெட் பகுதியில் செயல்படும் அம்மா உணவத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்.
அப்போது, காலையில் சமைக்கப்பட்ட உணவை சாப்பிட்டு பார்த்து பாராட்டினார். வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ஆய்வுக்கு சென்றார்.
அப்போது, பொதுத்தேர்வு எழுதவுள்ள பிளஸ் 2 மாணவர்களின் இயற்பியல் பாடப்புத்தகத்தை பெற்று, 'எலக்ட்ரிசிட்டி' பாடம் நடத்தினார். அதன்பின், மாணவ, மாணவியரிடம் கேள்வி கேட்டு, சரியான பதில் கூறிய மாணவர்களுக்கு, திருக்குறள் புத்தங்களை பரிசாக வழங்கினார். கலெக்டர் பேசும் போது, 'மாணவர்கள் நன்றாக படித்து, வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடையவேண்டும். பொதுத்தேர்வை நல்ல முறையில் எதிர்கொள்ள வேண்டும்,' என்றார். கலெக்டரே பாடம் நடத்தி, கேள்வி கேட்டு பரிசு வழங்கியதால், மாணவர்கள் உற்சாக மடைந்தனர்.