/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தன்னார்வலர்களுக்கு கலெக்டர் சான்றிதழ்
/
தன்னார்வலர்களுக்கு கலெக்டர் சான்றிதழ்
ADDED : டிச 12, 2025 05:22 AM

அன்னுார்: கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில், கவுசிகா நீர்க் கரங்கள் அமைப்பின் தன்னார்வலர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
கவுசிகா நீர்க் கரங்கள் அமைப்பு சார்பில், கோவை மாவட்டத்தில், 22 குளம், குட்டைகள் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஜல் சக்தி அபியான் சார்பில், கோவை மாவட்டத்திற்கு, நீர் மேலாண்மைக்கான தேசிய விருது வழங்கப்பட்டது.
இதையடுத்து, இதற்காக களத்தில் பணியாற்றி, மாவட்ட நிர்வாகத்திற்கு பல்வேறு புள்ளி விவரங்களை தந்த, பல்வேறு அமைப்புகளுக்கு கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் பாராட்டு சான்றிதழ் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டன. இதில் கவுசிகா நீர்க் கரங்கள் அமைப்பின் தன்னார்வலர்கள் துரைசாமி, விஜய ஆனந்த், கோபால், ஜெயபால், சிவராமன், ரங்கசாமி, யதீஸ், விஜய் பாபு ஆகியோருக்கு கோவை கலெக்டர் பவன் குமார், கூடுதல் கலெக்டர் சங்கேத் பல்வந்த் வாஹே ஆகியோர் பாராட்டு சான்றிதழ் வழங்கி, வாழ்த்து தெரிவித்தனர் .

