/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஹனுமன் கோவிலில் 19ம் தேதி ஜெயந்தி விழா
/
ஹனுமன் கோவிலில் 19ம் தேதி ஜெயந்தி விழா
ADDED : டிச 12, 2025 05:22 AM
சூலுார்: சூலூர் அடுத்த பெரிய குயிலியில் உள்ள கீதா பஜன் ஆஞ்சநேயர் கோவிலில் ஜெயந்தி விழா, வரும், 17ம்தேதி துவங்கி, 21ம்தேதி வரை ஐந்து நாட்கள் நடக்கிறது.
17ம் தேதி காலை, 7:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் விழா துவங்குகிறது. 8:00 மணிக்கு, ஆஞ்சநேய பெருமானுக்கு, சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது. தொடர்ந்து, அலங்கார பூஜை, மகா தீபாராதனை நடக்கிறது. காலை, 10:00 மணிக்கு, நாம சங்கீர்த்தன பஜனையும், மாலை, 6:00 மணிக்கு, வள்ளி கும்மியாட்டமும் நடக்கிறது.
19ம் தேதி ஹனுமன் ஜெயந்தியை ஒட்டி, சிறப்பு திருமஞ்சனம், அபிஷேக, அலங்கார பூஜை நடக்கிறது. ஐந்து நாட்களும், பல்வேறு குழுவினரின் வள்ளி கும்மி, நாம சங்கீர்த்தனம், ஒயிலாட்டம், கீதா பஜன் பிருந்தாவன நாட்டியம் நடக்கிறது. ஏற்பாடுகளை கீதா பஜன் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

