/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அறிவுசார் மையத்தில் பயிற்சி பெற்றவருக்கு அரசு வேலை
/
அறிவுசார் மையத்தில் பயிற்சி பெற்றவருக்கு அரசு வேலை
அறிவுசார் மையத்தில் பயிற்சி பெற்றவருக்கு அரசு வேலை
அறிவுசார் மையத்தில் பயிற்சி பெற்றவருக்கு அரசு வேலை
ADDED : டிச 12, 2025 05:22 AM
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் மணி நகரில், நகராட்சி நூலகம் மற்றும் அறிவு சார் மையம் செயல்படுகிறது. இங்கு மத்திய, மாநில அரசுகள் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கு, பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
நூலகம் மற்றும் அறிவு சார் மையத்தில் ஐந்தாயிரத்துக்கு மேற்பட்ட புத்தகங்கள், இணைய தளத்துடன் கூடிய கம்ப்யூட்டர்கள் உள்ளன. இதுவரை, 25 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் அறிவு சார் மையத்துக்கு வந்துள்ளனர்.
இந்நிலையில் இந்த அறிவுசார் பயிற்சி மையத்தில், பாலாஜி, 25 என்ற பி.இ., பட்டதாரி மாணவர், கடந்த ஜூலை மாதம் நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்விற்கு பயிற்சி பெற்றார். தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெற்றார். பின்பு தமிழக அரசின் கால்நடை வளர்ப்பு துறையில் இளநிலை உதவியாளர் பணியில் நியமனம் செய்யப் பட்டார். போட்டி தேர்வுகளுக்கு செல்வோர், அறிவுசார் மையம் நடத்தும் பயிற்சியில் சேர்ந்து பயன் பெறலாம்.

