ADDED : மார் 16, 2026 06:38 AM

அ நிறம் | அளவு
கோவை: யுனைடெட் கலை, அறிவியல் கல்லுாரியில் நான்காம் ஆண்டு விழா நடந்தது.
யுனைடெட் கல்விக் குழுமத்தின் தலைவர் மற்றும் நிறுவனர் பொறியாளர் சண்முகம் தலைமை வகித்தார்.
சின்னத்திரை புகழ் பிரனிகா தக்சு பங்கேற்று வாழ்வில், வெற்றி பெறுவதற்கான வழிகளை தம் வாழ்க்கை அனுபவங்கள் மூலம் எடுத்துரைத்தார்.
கல்லுாரி முதல்வர் விஜயா ஆண்டறிக்கை வாசித்தார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், சிறப்பாகச் செயலாற்றிய பேராசிரியர்களுக்கும் பரிசுகள், விருதுகள் வழங்கப்பட்டன.
பாடகர்கள் ஸ்ரீதர் சேனா, ரெஹானா, ஆதனா ஸ்ரீ, நகைச்சுவை பேச்சாளர்களான சுட்டி அரவிந்த், அசார், டி.ஜே., யோகராஜ் மற்றும் டி.ஜே., வால்சன் வேல் போன்ற பிரபலங்கள் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தினர்.
