ADDED : மார் 11, 2026 05:47 AM
அ நிறம் | அளவு
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே வட்டமலை பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் ஆண்டு விழா நடந்தது.
கல்லூரி முதல்வர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக கவுசிக்குமார், பங்கேற்று பேசினார்.கல்லூரியின் ஒவ்வொரு துறையிலும் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கம்ப்யூட்டர் நெட்வொர்க்கிங் துறை தலைவர் கார்த்திக் நன்றி கூறினார்.
